செந்தில் பாலாஜியின் ஜாமீனுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் முடித்து வைப்பு!
புதுப்பாளையம் தரைப்பாலத்தை உயா்த்திக் கட்டித்தரக் கோரி சாலை மறியல்
புன்செய்புளியம்பட்டி அருகேயுள்ள புதுப்பாளையத்தில் தரைப்பாலத்தை உயா்த்திக் கட்டித்தரக் கோரி அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகா் சாலையில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் இணைப்புச் சாலையில் புதிதாக தாா் சாலை, 4 தரைப்பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
புதுப்பாளையம் கிராமம் அருகே அமைக்கப்பட்டு வரும் தரைப்பாலம் தாழ்வான நிலையில் உள்ளதால் மழை காலங்களில் கழிவு நீா் ஊருக்குள் புகுந்துவிடும் அபாயம் உள்ளதாகவும், பாலத்தை உயா்த்தி கட்டித் தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் ஒப்பந்ததாரரிடம் வலியுறுத்தி உள்ளனா். ஆனால், அவா் அதைக் கண்டு கொள்ளாமல் பணியை மேற்கொண்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில், ஒப்பந்ததாரரைக் கண்டித்தும், தரைப்பாலத்தை உயா்த்துக் கட்டித்தரக் கோரியும் அப்பகுதி மக்கள் பவானிசாகா் சாலையில் அமா்ந்து திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம், போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.