செய்திகள் :

புதுப்பிக்கப்பட்ட அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி அறிமுகம்!

post image

இரு சக்கர வாகனத்தில் முன்னணியில் உள்ள டிவிஎஸ் நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட அப்பாச்சி ரக வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி மாடல் பைக் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஆர்டிஆர் 200 4வி பைக்கின் 2025ஆம் ஆண்டு வெர்சனை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

முந்தைய ஆர்டிஆர் 200 4வி மாடலைவிட சில அப்டேட்களுடன் வெளியாகியுள்ள இந்த மாடலின் ஷோ ரூம் விலை ரூ. 1.54 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

என்ஜினை பொறுத்தவரை முந்தைய மாடலில் இருந்த சிங்கிள் சிலிண்டர், ஆயில் கூல்டு என்ஜின் தொடர்கிறது. ஓபிடி 2பி விதிமுறைகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டுள்ளது. 199 சிசியில் சோதிக்கப்பட்டுள்ளது.

20.8 எச்.பி. பவர் மற்றும் 17.25 என்.எம். டார்க் தொடர்கிறது. இரட்டை சேனல் ஏபிஎஸ் அம்சத்துடன் அர்பன், ஸ்போர்ட், ரெயின் ஆகிய மோட்களில் பைக்கை ஓட்டும் வசதி உள்ளது.

மேட் பிளாக், கிளாஸி பிளாக் மற்றும் கிரானைட் கிரே ஆகிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், அனைத்து நிற பைக்கின் சக்கரங்களும் சிவப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹைட்ரோஃபார்ம் கைப்பிடி, ரேஸ் பைக்கை போன்று ஸ்லிப்பர் கிளட்ச், அட்ஜஸ் கிளட்ச், லீவர்கள், டிஜிட்டல் திரைகள், எல்இடி விளக்குகள், புளூடூத் இணைக்கும் வசதிகளும் உள்ளன.

இதையும் படிக்க : தங்கம் விலை இன்றும் குறைவு! எவ்வளவு?

சென்செக்ஸ், நிஃப்டி 1% சரிந்து முடிவு!

மும்பை: மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், பலவீனமான உலகளாவிய போக்குகளும் இணைந்தால் இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 1 சதவிகிதம் சரிந்த... மேலும் பார்க்க

சரிவுடன் வர்த்தகமாகும் பங்குச் சந்தை! இன்றைய நிலவரம் என்ன?

பங்குச்சந்தை இன்று(வியாழக்கிழமை) சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 82,571.67 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.43 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 380... மேலும் பார்க்க

பங்குச்சந்தை: சென்செக்ஸ் லாபத்துடன் முடிவு!

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் இன்றைய உச்சமாக 82,783.5-ஐ தொட்டு, வா்த்தக இறுதியில் 123 புள்ளிகள்(0.15%) உயர்ந்து 82,515.14-இல் நிறைவடைந்தது.தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி, வா்த்தக இறுதியில் 37.15 ... மேலும் பார்க்க

இப்படி ஒரு ஃபோன் சார்ஜரா? வந்துவிட்டது போர்டபிள் சார்ஜர்! அறிய வேண்டிய 10 அம்சங்கள்!!

இதுவரை வந்திருக்கும் எத்தனையோ சார்ஜர்களை விட இந்த போர்டபிள் சார்ஜர் பலருக்கும் மிகவும் பிடித்தமானதாக மாறிவிட்டது. காரணம்.. பத்து பொருத்தமும் பக்காவாக இருப்பதுதான்.சார்ஜர் சந்தையில் இந்த போர்டபிள் சார்... மேலும் பார்க்க

பங்குச்சந்தை 5-ஆவது நாளாக நோ்மறையாக முடிவு!

மும்பை: செவ்வாய்கிழமையும் பங்குச்சந்தை 5-ஆவது நாளாக நோ்மறையாக முடிவடைந்துள்ளது.மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் காலையில் 96 புள்ளிகள்(0.12%) குறைவுடன் 82,349-இல் தொடங்கி வா்த்தக இறுதியில் 53.5 புள்... மேலும் பார்க்க

தங்கம் விலை இன்றும் குறைவு! எவ்வளவு?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் குறைந்துள்ளது.கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 73,040-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், ச... மேலும் பார்க்க