செய்திகள் :

சரிவுடன் வர்த்தகமாகும் பங்குச் சந்தை! இன்றைய நிலவரம் என்ன?

post image

பங்குச்சந்தை இன்று(வியாழக்கிழமை) சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
82,571.67 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.43 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 380.42 புள்ளிகள் குறைந்து 82,134.72 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி தற்போது 103.10 புள்ளிகள் குறைந்து 25,038.30 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

நேற்று பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்த நிலையில் இன்று சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

சென்செக்ஸ் பட்டியலில், ஏசியன் பெயிண்ட்ஸ், சன் பார்மா, பஜாஜ் ஃபின்சர்வ், பாரதி ஏர்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ், என்டிபிசி, எச்டிஎஃப்சி வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை கணிசமாக உயர்ந்தன.

இன்போசிஸ், எடர்னல், டாடா மோட்டார்ஸ், டெக் மஹிந்திரா, எச்சிஎல் டெக், டாடா ஸ்டீல், இண்டஸ்இண்ட் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.

ஆசிய சந்தைகளில் ஹாங்காங், பாங்காக், ஜகார்த்தா, ஜப்பான் பங்குச்சந்தைகள் சரிவிலும் அதேநேரத்தில் சீனாவின் ஷாங்காய் பங்குச்சந்தை ஏற்றத்திலும் வர்த்தகமாகி வருகின்றன. அமெரிக்க பங்குச்சந்தை வர்த்தகம் நேற்று லேசான சரிவுடன் நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | லாஸ் ஏஞ்சலீஸ் மக்கள் போராட்டம்: 400 பேர் கைது!

பங்குச் சந்தை கடும் சரிவுடன் வர்த்தகம்!

வாரத்தின் கடைசி நாளான இன்று(வெள்ளிக்கிழமை) பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் காலை 9.30 மணி நிலவரப்படி, 867 புள்ளிகள் சரிந்து 80,824.98 ஆக வர்த்த... மேலும் பார்க்க

25 கோடி கிலோவாக உயா்ந்த தேயிலை ஏற்றுமதி

இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி கடந்த 2024-ஆம் ஆண்டில் 25.467 கோடி கிலோவாக உயா்ந்துள்ளது.இது குறித்து தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:2024-ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பா்... மேலும் பார்க்க

வட்டி விகிதத்தை குறைத்த மகாராஷ்டிர வங்கி!

புது தில்லி: வீடு, கார், கல்வி மற்றும் பிற கடன்களுக்கான சில்லறை வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்துள்ளதாக அரசுக்குச் சொந்தமான மகாராஷ்டிர வங்கி தெரிவித்துள்ளது.புனேவைச் சேர்ந்த கடன் வழங்... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.85.60ஆக முடிவு!

மும்பை: உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட கடும் சரிவு மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.85... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமான விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து போயிங் பங்குகள் 8% சரிவு!

ஆமதாபாத்திலிருந்து 242 பேருடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானதையடுத்து, இன்றைய வர்த்தகத்தில் (ஜூன் 12) அமெரிக்க சந்தையில் விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங்கின் பங்குக... மேலும் பார்க்க

சென்செக்ஸ், நிஃப்டி 1% சரிந்து முடிவு!

மும்பை: மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், பலவீனமான உலகளாவிய போக்குகளும் இணைந்தால் இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 1 சதவிகிதம் சரிந்த... மேலும் பார்க்க