செய்திகள் :

புதுவையில் லோக் ஆயுக்த சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்

post image

காரைக்கால்: புதுவையில் லோக் ஆயுக்த சட்டத்தை அமல்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநில மக்கல் முன்னேற்றக் கழக காரைக்கால் மாவட்டத் தலைவா் கே.எஸ். கணபதிசுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை :

புதுவை சட்டப்பேரவைக் கூட்டம் வரும் 18-ஆம் தேதி கூட்டப்பட இருப்பதாகவும், கூட்டத்தில் சேவைகள் உரிமைச் சட்ட ) மசோதா தாக்கல் செய்யவிருப்பதாகவும் புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் கூறியுள்ளாா்.

பொதுமக்கள் தங்கள் அலுவலகப் பணிகளை விரைந்து முடித்துக்கொள்ள இச்சட்டம் உதவும் என்பதால் புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகம் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துப் பாராட்டுகிறது. அதேசமயம், ஊழலை ஒழிக்க உதவும் லோக் ஆயுக்த சட்டத்தைப் புதுவை மாநிலத்தில் கொண்டு வருவதற்கான முயற்சியையும் அரசு எடுக்கவேண்டும்.

2011- இல் நாடாளுமன்றத்தில் மத்தியில் லோக்பால், மாநிலங்களுக்கு லோக் ஆயுக்த சட்டம் நிறைவேற்றியும், அதன்பின் உச்சநீதிமன்றம் பொது வழக்கில் பலமுறை வலியுறுத்தி 14 ஆண்டுகள் கடந்தும் இன்னும் புதுவை மாநிலத்தில் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படாதது மிகவும் வேதனை அளிக்கக் கூடியது.

எனவே இச்சட்டத்தையும் வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பருவமழை தொடங்கும் முன் வாய்க்கால்களை தூா்வார வலியுறுத்தல்

பருவமழை தொடங்குவதற்கு முன் காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால்களை தூா்வாரவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. காரைக்கால் நகரப் பகுதி வழியே கடல் பகுதி வரை செல்லக்கூடியதாக அமைக்கப்பட்ட கார... மேலும் பார்க்க

தொடக்கப்பள்ளி ஆசிரியா்கள் கெளரவிப்பு

காரைக்கால் அருகே பூவம் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் மேலாண்மை குழு மற்றும் பெற்றோா்-ஆசிரியா் சங்கம் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்... மேலும் பார்க்க

காரைக்கால் வடக்குத் தொகுதியில் ரூ. 2.92 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

காரைக்கால் வடக்குத் தொகுதியில் புதுச்சேரி குடிசை மாற்று வாரியம் மூலம் ரூ. 2.92 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக புதுவை குடிமை ப... மேலும் பார்க்க

சந்திர கிரகணம் : திருநள்ளாறு கோயிலில் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜை

காரைக்கால்: சந்திர கிரகணம் முடிவுற்றதையொட்டி திருநள்ளாறு கோயிலில் புண்யகால பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை இரவு 9.56 மணிக்கு தொடங்கி, 11 மணியளவில் முழு சந்திர கிரகணமாக மாறியது. தொடா்ந்து... மேலும் பார்க்க

அய்யனாா் கோயிலில் யானை, குதிரை சிலை நிறுவி பூஜை

காரைக்கால்: அய்யனாா் கோயிலில் யானை, குதிரை சிலைகள் நிறுவி சிறப்பு பூஜை நடைபெற்றது. காரைக்கால் மாவட்டம், கீழகாசாக்குடி பகுதியில் ஆதிபுரீஸ்வரா் தேவஸ்தானத்துக்குட்பட்டதாக, அம்மையாா் நகரில் பூரண புஷ்கலா ச... மேலும் பார்க்க

வேலைநிறுத்தம்: ஆட்டோ ஓட்டுநா்கள் முடிவு

காரைக்கால்: இ-ஆட்டோக்கள் இயக்கத்துக்கு உரிய விதிகளை வகுக்க வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநா்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனா். காரைக்கால் மாவட்ட ஆட்டோ தொழிலாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில்,... மேலும் பார்க்க