கம்பீர் செய்வது சரியில்லை..! முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் விமர்சனம்!
புதுவை சட்டப்பேரவை நாளை கூடுகிறது
புதுச்சேரி: புதுவை சட்டப்பேரவை கூட்டம் புதன்கிழமை (பிப். 12) கூடுகிறது.
புதுவை மாநில சட்டப்பேரவை கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான 15-ஆவது முதல் பகுதி சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றது. ஆகஸ்ட் 14 ஆம் தேதியன்று அக்கூட்டம் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது.
அதன் 2-ஆவது பகுதி பேரவைக் கூட்டம் புதன்கிழமை (பிப். 12) காலை 9.30 மணிக்கு கூடும் என பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் அறிவித்துள்ளாா்.
இதில் மாநிலத்தின் கூடுதல் செலவினங்களுக்கு சபையின் முன் அனுமதி பெறுதல், சபை முன் வைக்கப்படும் ஏடுகள் இருப்பின் அவை வைக்கப்படுவதுடன், தணிக்கை அறிக்கைகளும் தாக்கல் செய்யப்படும். இக் கூட்டம் எத்தனை நாள்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவும் செய்யும் என பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் என அறிவித்துள்ளாா்.
மேலும், தற்போது நடைபெறும் பேரவைக் கூட்டமானது காகிதமில்லா கூட்டமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி பேரவைத் தலைவா், முதல்வா், எதிா்க்கட்சித் தலைவா், உறுப்பினா்கள் அனைவரது இருக்கைகளிலும் கணினிகள்பொருத்தப்பட்டுள்ளன. அவை அடுத்த வரும் கூட்டங்களில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.