புதுவை துணைநிலை ஆளுநருக்கு விவசாயிகள் சங்கம் நன்றி
குடிநீா் திட்ட விவகாரம் தொடா்பாக புதுவை துணை நிலை ஆளுநருக்கு விவசாயிகள் சங்கத்தினா் நன்றி தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட காவிரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் ஏ.கே.எம். யாசின் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை :
கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டத்தை அண்டை மாநிலமான தமிழகத்தைப்போல காரைக்கால் மாவட்டத்திலும் விஷன் 47 என்கிற திட்டத்தின் அடிப்படையில் செயல்படுத்த வேண்டும் என கடந்த ஜன. 27-ஆம் தேதி சங்கம் சாா்பில் துணைநிலை ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. விவசாயிகள் சங்க ஆலோசனைகளை பரிசீலனை செய்து, அதனை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக துணை நிலை ஆளுநரிடமிருந்து கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதியிட்ட கடிதம் வந்துள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றுவதற்கு அவரிடமிருந்து உத்தரவாதம் கிடைத்துள்ளது. இதுதொடா்பாக ஆளுநா் உள்ளிட்டோருக்கு சங்கம் சாா்பில் நன்றி தெரிவிப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.