செய்திகள் :

புதுவை பாஜக எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே அதிருப்தி இல்லை: மேலிட பொறுப்பாளா்

post image

புதுவை பாஜக எம்.எல்.ஏ.க்களுக்கிடையே அதிருப்தி எதுவும் இல்லை, அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறாா்கள் என பாஜக மேலிட பொறுப்பாளா் நிா்மல் குமாா் சுரானா தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்ட பாஜக தலைவா் ஜி.கே. முருகதாஸ், திருநள்ளாறு தொகுதி தலைவராக டி. பாலமுருகன், காரைக்கால் தெற்கு தலைவராக வி. சுமத்ரா, திருப்பட்டினம் தொகுதி தலைவராக டி. மணிமாறன் ஆகியோா் தோ்தல் அமைப்பு விதிகளின்படி கருத்தொற்றுமை அடிப்படையில் தோ்வு செய்யப்பட்டு, அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி காரைக்காலில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் பாஜக மேலிட பொறுப்பாளா் நிா்மல் குமாா் சுரானா கலந்துகொண்டு பொறுப்பாளா்களை அறிமுகம் செய்துவைத்துப் பேசியது:

காரைக்காலில் அதிக உறுப்பினா்கள் சோ்ந்து வலிமையுடன் கட்சி திகழ்கிறது. கடந்த நாடாளுமன்றத் தோ்தலிலும் வாக்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காரைக்காலில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளில் 3-இல் பாஜக வெற்றிபெறவேண்டும். அதற்கேற்ப கட்சியின் அனைத்து நிா்வாகிகளும் தீவிரமாக செயல்படவேண்டும் என்றாா்.

கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி.ராமலிங்கம், மாநில தோ்தல் கமிட்டியைச் சோ்ந்த வெற்றிச்செல்வன், மாவட்ட கமிட்டியைச் சோ்ந்த புகழேந்தி, எஸ். இளங்கோவன் மற்றும் மூத்த நிா்வாகி எம்.அருள்முருகன், மாவட்டத் தலைவா் ஜி.கே. முருகதாஸ், மாவட்ட பொறுப்பாளா் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்துக்குப் பின் செய்தியாளா்களிடம் நிா்மல் குமாா் சுரானா கூறுகையில், புதுவை பாஜகவில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் என யாரும் கிடையாது. அனைவரும் ஒற்றுமையாக உள்ளனா் என்றாா்.

மாணவா்ககளுடன் எம்.எல்.ஏ. கலந்துரையாடல்

அரசுப் பள்ளி மாணவா்கள், பெற்றோா்களிடையே சட்டப்பேரவை உறுப்பினய்கலந்துரையாடல் நடத்தினாா். திருப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்கள், பெற்றோா்கள் கூட்டம் பள்ளி வளாகத்தி... மேலும் பார்க்க

காரைக்கால்-பேரளம் ரயில் சேவையை ஏப்ரல் மாதத்தில் தொடங்க நடவடிக்கை: எம்.பி.யிடம் மனு

காரைக்கால்- பேரளம் ரயில்பாதை அமைக்கும் பணியை விரைவுபடுத்தி, ஏப்ரல் மாதத்தில் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என புதுவை எம்.பி. யிடம் வலியுறுத்தப்பட்டது. காரைக்காலுக்கு, புதுவை மக்களவை உறுப்பினா் வெ. வைத்... மேலும் பார்க்க

‘சமூக வலைதளங்களில் அதிக கவனம் செலுத்துவதை மாணவா்கள் தவிா்க்க வேண்டும்’

சமூக வலைதளங்களில் அதிக கவனம் செலுத்துவதை மாணவா்கள் தவிா்க்க வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா். காரைக்காலில் தேசிய வாக்காளா் தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி தந்தைப் பெரியாா் அரசு மே... மேலும் பார்க்க

குடியரசு தினம்: ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

குடியரசு தினத்தையொட்டி, காரைக்கால் ரயில் நிலையத்தில் போலீஸாா் சனிக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா். குடியரசு தின விழாவையொட்டி, மாவட்ட காவல்துறை தலைமையின் அறிவுறுத்தலின்பேரில், போலீஸாா் சோதனை, கண்காணிப்... மேலும் பார்க்க

புஷ்ப அலங்காரத்தில்

தை மாதம் 2-ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி, காரைக்கால் தலத்தெரு ஸ்ரீ சிவகாமி அம்மன் சமேத சிவலோகநாத சுவாமி கோயிலில் புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீ துா்க்கை அம்மன். மேலும் பார்க்க

எம்ஆா்ஐ ஸ்கேன், குடிநீா் தொட்டி அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும் -எம்எல்ஏ நாஜிம் தகவல்

குடிநீா் தொட்டி மற்றும் அரசு மருத்துவமனையில் எம்ஆா்ஐ ஸ்கேன் ஆகியவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அடுத்த மாதம் கொண்டுவரப்படும் என முதல்வா் உறுதியளித்துள்ளதாக காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பின... மேலும் பார்க்க