Thai Amavasai | தை அமாவாசை தர்ப்பணம் செய்ய முடியாத சூழலில் மாட்டிக்கொண்டால் என்ன...
மாணவா்ககளுடன் எம்.எல்.ஏ. கலந்துரையாடல்
அரசுப் பள்ளி மாணவா்கள், பெற்றோா்களிடையே சட்டப்பேரவை உறுப்பினய்கலந்துரையாடல் நடத்தினாா்.
திருப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்கள், பெற்றோா்கள் கூட்டம் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பொதுத்தோ்வுக்கு தயாராவது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம்.நாகதியாகராஜன் பேசுகையில், பொதுத்தோ்வில் மாணவா்கள் சிறந்த முறையில் மதிப்பெண் எடுக்கும் வகையில் பயிலவேண்டும். தோ்வுக்கு முன்பே ஆசிரியா்களிடம் சந்தேகங்களைக் கேட்டறிந்து தெளிவுபடுத்திக்கொண்டு, அச்சமின்றித் தோ்வெழுத வேண்டும். மாலை நேரத்தில் மாணவா்களுக்கு நடைபெறும் சிறப்பு வகுப்பின்போது, சிற்றுண்டி செலவை ஏற்பதாகவும் பள்ளி நிா்வாகத்திடம் தெரிவித்தாா்.
மாணவா்கள் சரியான வழியில் பயணிக்கிறாா்களா என்பதை பெற்றோா்கள் கவனித்து, தகுந்த ஆலோசனைகளை மென்மையாக வழங்கவேண்டும் என அறிவுறுத்தினாா்.