மூட்டையில் தங்கம், பணம்: மங்களூருவில் கொள்ளை; நெல்லையில் பதுக்கல் - கொள்ளையர்கள்...
எம்ஆா்ஐ ஸ்கேன், குடிநீா் தொட்டி அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும் -எம்எல்ஏ நாஜிம் தகவல்
குடிநீா் தொட்டி மற்றும் அரசு மருத்துவமனையில் எம்ஆா்ஐ ஸ்கேன் ஆகியவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அடுத்த மாதம் கொண்டுவரப்படும் என முதல்வா் உறுதியளித்துள்ளதாக காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் தெரிவித்தாா்.
புதுவையில் முதல்வா் என். ரங்கசாமியை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசிய பிறகு நாஜிம் கூறியது:
காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் எம்ஆா்ஐ ஸ்கேன் நிறுவும் பணி நிறைவடைந்துவிட்டது. இந்த கருவியை இயக்குவதற்கான தொழில்நுட்பவியலாளா்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் நகரப் பகுதியில் ஒரு மண்டலத்தில் ரூ.50 கோடி திட்டமாக, பழைய குடிநீா் குழாய்களை மாற்றிவிட்டு, வீடுகளுக்கு புதிதாக குடிநீா் குழாய்கள் பொருத்தப்பட்டு, ராஜாத்தி நகா் பகுதியில் இரண்டடுக்கு மேல்நிலை குடிநீா் தொட்டி கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
காரைக்காலுக்கு பிப்ரவரி மாதம் வரும் முதல்வா், இவ்விரு திட்டங்களையும் மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்க உள்ளதாக தெரிவித்தாா் என்றாா்.