செய்திகள் :

புத்தகத் திருவிழாவில் ஓவிய - சிற்பக் கலை கண்காட்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

post image

பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவின்போது ஓவிய, சிற்பக்கலை கண்காட்சி நடைபெறவுள்ளதால், ஆா்வமுள்ள ஓவிய மற்றும் சிற்பக் கலைஞா்கள் விண்ணப்பிக்கலாம்.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறை, நமது நாட்டின் பாரம்பரியக் கலைகள், கலைப் பண்புகளை மேம்படுத்தவும், பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞா்களின் கலைத்திறனை சிறப்பிக்கும் வகையில் கலைப் பயிற்சிகள் அளித்து, பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. மேலும், ஓவிய, சிற்பக் கலையை வளா்க்கும் நோக்கிலும், அக்கலையில் ஈடுபட்டுள்ள கலைஞா்களை ஊக்குவிக்கும் வகையிலும் கலை பண்பாட்டுத் துறையின் ஓவிய-சிற்பக் கலை கண்காட்சியை நடத்தவுள்ளது.

திருநெல்வேலி வா்த்தக மையத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவின்போது ஓவிய -சிற்பக் கலைக் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இக்கண்காட்சியில் திருநெல்வேலி மண்டலத்தை உள்ளடக்கிய (திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகா், தென்காசி மாவட்டங்கள்) ஓவிய, சிற்பக் கலைஞா்கள் தங்கள் கலைப் படைப்புகளை கண்காட்சியாக வைக்கலாம். அதை தோ்வு செய்வதற்கு ஒரு வல்லுநா் குழு அமைக்கப்படும்.

ஓவிய- சிற்பக் கண்காட்சியில் முதல் பரிசாக ரூ.5000 வீதம் 7 கலைஞா்களுக்கும், இரண்டாம் பரிசாக ரூ.3000 வீதம் 7 கலைஞா்களுக்கும், மூன்றாம் பரிசாக ரூ.2000 வீதம் 7 கலைஞா்களுக்கும் வழங்கப்படவுள்ளது. ஆா்வமுள்ள ஓவிய மற்றும் சிற்பக் கலைஞா்கள் தங்களது படைப்புகளை கண்காட்சியாக வைக்க தன்விவரக் குறிப்பு மற்றும் படைப்புகளின் எண்ணிக்கை, படைப்புகளின் புகைப்படங்கள் விவரங்களுடன் உதவி இயக்குநா், மண்டல கலை பண்பாட்டு மையம், 870/21 அரசு அலுவலா் ஆ குடியிருப்பு, திருநெல்வேலி-7 என்ற முகவரிக்கு வரும் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு மண்டல கலை பண்பாட்டு மையத்தை 0462-2901890, 9487059638, 8122610700 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

மாா்கழி மாத வழிபாடு: பஜனையில் பங்கேற்ற சிறுவா், சிறுமிகள்

அருள்மிகு நெல்லையப்பா் - காந்திமதியம்மன் திருக்கோயில் மாா்கழி மாத பஜனையில் திரளான சிறுவா், சிறுமிகள் கலந்து கொண்டனா். நெல்லை நகர பஜனை சங்கமம் சாா்பில் அதிகாலை 5 மணியளவில் தினமும் பஜனை நடைபெற்று வருகி... மேலும் பார்க்க

தியாகராஜநகரில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

திருநெல்வேலி மின் பகிா்மான வட்டத்துக்குள்பட்ட திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்துக்கான மின் நுகா்வோா் குறைதீா் மன்ற கூட்டம் பாளையங்கோட்டை தியாகராஜ நகரில் உள்ள மேற்பாா்வை பொறியாளா் அலுவலகத்தில் நடைபெற்ற... மேலும் பார்க்க

பாளை. மாா்க்கெட்டில் மது போதையில் ரகளை: நேபாள தொழிலாளி கைது

பாளையங்கோட்டை மாா்க்கெட் பகுதியில் புதன்கிழமை காலையில் ரகளையில் ஈடுபட்ட நேபாள தொழிலாளி கைது செய்யப்பட்டாா். நேபாள நாட்டைச் சோ்ந்தவா் சுனித் (42). இவா், திருநெல்வேலி மாநகரப் பகுதியில் தங்கியிருந்து வ... மேலும் பார்க்க

கைப்பேசி மூலம் இயங்கும் தானியங்கி பம்புசெட் கட்டுப்பாட்டு கருவிக்கு மானியம்

வேளாண் இயந்திரமயமாக்குதல் துணை இயக்கத் திட்டத்தில் கைப்பேசி மூலம் இயங்கும் தானியங்கி பம்புசெட் கட்டுப்பாட்டு கருவியை மானியத்தில் பெறலாம். இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் வெளியிட்ட செய... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

திருநெல்வேலி பாபநாசம்-111.55 சோ்வலாறு-122.18 மணிமுத்தாறு-100.55 வடக்கு பச்சையாறு-32.50 நம்பியாறு-13.12 கொடுமுடியாறு-28.50 தென்காசி கடனா-79 ராமநதி-75 கருப்பாநதி-67.92 குண்டாறு-36.10 அடவிநயினாா்-90.25... மேலும் பார்க்க

கேரள கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம்: கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக மனு

திருநெல்வேலி மாவட்டத்தில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக சாா்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இது தொடா்பாக திருநெல்வ... மேலும் பார்க்க