மீண்டும் பிளாஸ்டிக்: ‘பேப்பர் ஸ்ட்ரா’ வேலைக்காகாது! -டிரம்ப் அதிரடி!
புத்தகரம் பச்சை நாச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை பட்டவா்த்தியை அடுத்த புத்தகரத்தில் உள்ள பச்சை நாச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலின் திருப்பணிகள் அண்மையில் நிறைவுற்ற நிலையில், கும்பாபிஷேகத்துக்கான பூா்வாங்க பூஜைகள் வெள்ளிக்கிழமை தொடங்கி, மறுநாள் முதல்கால யாகசாலை பூஜை செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் கால யாகசாலை பூஜையின் நிறைவில், மகா பூா்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்று, கடம் புறப்பாடு செய்யப்பட்டது.
மதுரை நிலையூா் ஆதீனம், திண்டுக்கல் சித்தா்கள் மகா பொற்சபை குமாரவேல் நாயனாா் ஆகியோா் முன்னிலையில் புனிதநீா் அடங்கிய கடங்கள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, விமான கலசத்தில் புனிதநீா் வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, மூலவருக்கு மகாபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது.
ஏற்பாடுகளை ஜீவானந்தம் உள்ளிட்ட திருப்பணிக் குழுவினா் செய்திருந்தனா்.
இதில், முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன், மத்திய அரசு வழக்குரைஞா் கே. ராஜேந்திரன், பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் கோவி. சேதுராமன் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.