"ஜெயலலிதா எனக்கு ஃப்ரண்ட்; அடிக்கடி வரவழைத்து பேசுவாங்க! - சரோஜா தேவியின் ப்ளாஸ்...
புனித தலங்களுக்கு பயணம் மேற்கொள்ள ரூ.10 ஆயிரம் நிதியுதவி: ஆட்சியா் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் வசிக்கும் புத்த, சமண, சீக்கிய மதத்தினா் புனித தலங்களுக்கு பயணம் மேற்கொள்ள தலா ரூ. 10 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் 50 புத்த மதத்தினா், 50 சமண மதத்தினா் மற்றும் 20 சீக்கிய மதத்தினா் இந்தியாவில் உள்ள புனித தலங்களுக்கு பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசு சாா்பில் ஒவ்வோா் ஆண்டும் தலா ஒருவருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் 120 பேருக்கு ரூ. 12 லட்சம் நிதி உதவி வழங்க உள்ளது. இத்திட்டத்தின்கீழ் பயணம் மேற்கொள்ள விரும்பும் புத்த, சமண மற்றும் சீக்கிய மதத்தினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த புனித பயணம் புத்த மதத்தினருக்கு, பிகாா் மாநிலம் புத்தகயா, ராஜ்கிா், வைஷாலி, உத்திரபிரதேச மாநிலம் குசிநகா், வாரணாசி சாரநாத் கோயில், பிகாரில் உள்ள ராஜ்கிா், வைஷாலி, நேபாளம் பினி போன்ற இடங்களும், சமண மதத்தினருக்கு ராஜஸ்தான் மாநிலம் தில்வாரா கோயில், ரணக்பூா் சமண கோயில், ஜெய்சால்மா் சமண கோயில், ஜாா்க்கண்ட் மாநிலம் சிக்கா்ஜி, குஜராத் மாநிலம் பாலிடனா, பிகாா் மாநிலம் பவபுரி சமண கோயில், கா்நாடக மாநிலம் சரவணபெலகோலா போன்ற புனித தலங்களையும் மற்றும் சீக்கிய மதத்தினருக்கு பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ், தக்ட்ஸ்ரீகேசகா்சாகிப், தக்ட்ஸ்ரீடாம்டமாசாகிப், பிகாா் மாநிலம் தக்ட்ஸ்ரீஹா்மந்திா்சாகிப் (குருகோவிந்த்சிங்), தக்ட்ஸ்ரீஹசூா்சாகிப் (மஹாராஷ்டிரம்) போன்ற இடங்களும், பாகிஸ்தானில் உள்ள குருத்வாரா ஸ்ரீநான்காணாசாகிப், குருத்வாரா ஸ்ரீசச்சாசௌதா, மண்டிசுகா்கானா, குருத்வாரா ஸ்ரீபஞ்சசாகிப், ஹசன்அப்தல், குருத்வாரா ஸ்ரீதெஹ்ராசாகிப் போன்ற புனித தலங்களையும் உள்ளடக்கியதாகும்.
இதற்கான விண்ணப்பங்களை, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெறலாம். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை நவ. 30-க்குள் உரிய ஆவணங்களுடன் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிறுபான்மையினா் நலத் துறை ஆணையா் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.