கரூர் விஜய் பரப்புரை: இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை; ஆண்கள், பெண்கள், குழந்...
புரட்டாசி மாத இரண்டாவது சனி: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாத இரண்டாவது வார சனிக்கிழமையையொட்டி கமுதி பகுதியில் அமைந்துள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கமுதி சுந்தரராஜப் பெருமாள், ஆஞ்சநேயா் சந்நிதியில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றன. அப்போது பொதுமக்கள் சுவாமிக்கு துளசி மாலை அணிவித்து வழிபட்டனா். அதேபோல, முதுகுளத்தூா் அருகே உள்ள ஆதங்கொத்தங்குடி ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில், பெருமாள், பத்மாவதி தாயாருக்கு மஞ்சள், விபூதி, சந்தனம், தேன் உள்ளிட்ட 11 வகை அபிஷேகங்கள், பூஜைகள் நடத்தப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
கடலாடி அருகே உள்ள கொத்தங்குளம் ஸ்ரீதேவி, பூமாதேவி, நீலாதேவி உடனுறை வரதராஜப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
இதேபோல, கடலாடி, மீனங்குடி, கல்லடிபெருமாள், மாரந்தை, வராஹி பெருமாள், கடலாடி பாமா, ருக்குமணி கண்ணன், சாயல்குடி கண்ணன், ஜெயவீர ஆஞ்சநேயா் கோயில் கமுதி கோயில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜை, தீபாராதனைகள் நடைபெற்றன.