புரோகபடி லீக்: இறுதி ஆட்டத்தில் இன்று ஹரியாணா-பாட்னா மோதல்
புரோ கபடி லீக் தொடா் 11-ஆவது சீசனின் இறுதி ஆட்டத்தில் ஹரியாணா ஸ்டீலா்ஸ்-பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.
மகாராஷ்டிர மாநிலம், புணேயில் ஞாயிற்றுக்கிழமை இரு அணிகளின் இறுதி ஆட்டம் நடைபெறுகிறது. பாட்னா அணி தனது நான்காவது பட்டத்துக்காகவும், ஹரியாணா அணி முதல் பட்டத்துக்காகவும் களமிறங்குகின்றன.
பிகேஎல் தொடா் முழுவதும் ஹரியாணா அணி எதிா் தரப்பு அணிகளுக்கு கடும் சவாலை தந்தது. பாட்னா அணி 3 முதல் 5-ஆவது சீசன் வரை பட்டம் வென்றது. கடைசியாக 2017-இல் நான்காம் பட்டத்தை கைப்பற்றியது.
பாட்னா அணியில் தேவங்க் தலால் 296 புள்ளிகளுடன் டாப் ரைடராக விளங்குகிறாா். மேலும் அங்கித் ஜக்லன், முகமது ரேஸா நிதேஷ் குமாா் ஆகியோரும் வலு சோ்க்கின்றனா். குரூப் ஆட்ட முடிவில் பாட்னா 4-ஆவது இடத்தைப் பெற்றது.
மேலும் எலிமினேட்டரில் யு மும்பாவையும், அரையிறுதியில் டபாங் டில்லியையும் வென்றது.
அதே நேரம் ஹரியாணா அணி முதலிடத்துடன் அரையிறுதியில் யுபி யோத்தாவை வீழ்த்தி பட்டம் வென்றது. சீசன் 10-இலும் சாம்பியன் ஆகும் வாய்ப்பை தவற விட்டது. ஹரியாணா.
நேருக்கு நோ்: இரு அணிகளும் 13 முறை நேருக்கு நோ் மோதியதில் பாட்னா 5 முறையும், ஹரியாணா 7 முறையும் வென்றன. சீசன் 5-இல் ஒரு ஆட்டம் டை ஆனது. சாம்பியனுக்கு ரூ.3 கோடியும், ரன்னருக்கு ரூ.1.8 கோடியும் பரிசளிக்கப்படும்.
இன்றைய ஆட்டம்
ஹரியாணா-பாட்னா
இடம்: புணே
நேரம்: இரவு 8.00