செய்திகள் :

‘புற்றுநோய் பாதிப்பு' - சின்னத்திரை நடிகர் நேத்ரன் மறைவு

post image

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `ரஞ்சிதமே' தொடரில் நடித்துக் கொண்டிருந்தவர் நடிகர் நேத்ரன். டான்ஸர், நடிகர் எனப் பன்முகம் கொண்டவர். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் பரிச்சயமான நடிகர். இவருடைய காதல் மனைவி தீபா. சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘சிங்கப்பெண்ணே’ தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவரும் சின்னத்திரையில் பரிச்சயமானவர்.

நேத்ரன்

நேத்ரன் - தீபா தம்பதிக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் அபிநயா `கனா காணும் காலங்கள் சீசன் 2' வெப் சீரிஸில் நடித்திருந்தார். சமீபத்தில் அபிநயா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘அப்பாவுக்கு கேன்சர் பாசிட்டிவ். சர்ஜரி பண்ணிட்டாங்க. கல்லீரல் டேமேஜ் ஆகியிருக்குன்னு மறுபடி ஐசியூவில் வச்சிருக்காங்க. அப்பா சீக்கிரம் சரியாகி வரணும்! நீங்க எல்லாரும் ப்ரே பண்ணிக்கோங்க!’ எனக் கூறியிருந்தார். 

இந்நிலையில் இன்று நேத்ரன் இயற்கை எய்தியிருக்கிறார். அவருடைய மறைவு பலருக்கும் அதிர்ச்சியையும், சோகத்தையும் உண்டாக்கியிருக்கிறது. இது தொடர்பாக நேத்ரனின் நண்பரும் நடிகருமான டிங்கு அவருடைய ஃபேஸ்புக் பதிவில், ‘ என் நண்பனின் மறைவு சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. Rest In Peace My friend’ என்கிற கேப்ஷனுடன் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார்.

நேத்ரன்

சின்னத்திரை நடிகர்கள், அவருடைய ரசிகர்கள் எனப் பலரும் அவருடைய மறைவுக்கு இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஆழ்ந்த இரங்கல்கள்! 

Bigg Boss: ''எங்க அக்கா பிக்பாஸ் டைட்டில் ஜெயிச்சா..!'' - ஸ்ருதிகா தம்பி ஆதித்யா ஷேரிங்ஸ்

அக்கா ஸ்ருதிகா இந்தி பிக்பாஸில் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார். ஸ்ருதிகாவின் தம்பி ஆதித்யா, சென்னையில் இரண்டு இடங்களில் 'நெய் இட்லி சாம்பார்' என்கிற ரெஸ்ட்டாரன்ட்டை நடத்தி வருகிறார். `செலிபிரெட்ட... மேலும் பார்க்க

BB Tamil 8: ``என்னை வெளியே விடுங்க நான் போறேன்..."- அலறும் அன்ஷிதா! - நடந்தது என்ன?

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் 59- வது நாளுக்கான புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் டெவில்ஸ் மற்றும் ஏஞ்சல்ஸ் டாஸ்க் தொடங்கி இருக்கிறது. ஏஞ்சல்ஸ் அணியில் இருக்கும் போட்டிய... மேலும் பார்க்க

BB Tamil 8: ஜாக்குலின் - தர்ஷிகா இடையே மோதல்; அடிக்க சென்ற சவுந்தர்யா? - என்ன நடந்தது?

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் 59- வது நாளுக்கான புரோமோ வெளியாகி இருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் டெவில்ஸ் மற்றும் ஏஞ்சல்ஸ் டாஸ்க் தொடங்கி இருக்கிறது. ஏஞ்சல்ஸ் அணியில் இருக்கும் போட்டி... மேலும் பார்க்க

Archana : `எனக்கு கொலை மிரட்டல்கள் வருது..!' - பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா குற்றச்சாட்டு

கடந்த சீசன் டைட்டில் வின்னரான அர்ச்சனா இந்த முறை அருண் பிரசாத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.பிக் பாஸ் வீட்டில் அருண் செய்யும் விஷயங்களுக்காக வெளியில் அர்ச்சனாவை நெட்டிசன்கள் தொடர்ந்து ட்ரோல் செய்... மேலும் பார்க்க

BB TAMIL 8: DAY 57: அம்பலமான ஜாக்குலின், சவுந்தர்யா சுயரூபங்கள் - ஒதுக்கப்படுகிறாரா ராணவ்?!

ஒருவரை பலரும் சேர்ந்து எதிர்க்கிறார்கள் என்றால் அவர் வலிமையாகிக் கொண்டே போகிறார் என்று பொருள். பிக் பாஸ் வீட்டிற்கு மட்டுமல்ல, உலக நடைமுறைக்கும் இது பொருந்தும். மஞ்சரியின் கதை அப்படித்தான் செல்லும் போ... மேலும் பார்க்க

Rajini - Super Singer : `ரஜினி ஹிட்ஸ்' - சூப்பர் சிங்கரில் ரஜினி கொடுக்கவிருக்கும் அந்த கிஃப்ட்!

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 சமீபத்தில் ஒளிபரப்பாக தொடங்கியது.6 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு முந்தைய சீசன்களில் இந்த மேடையில் தங்... மேலும் பார்க்க