யேமனில் மரண தண்டனை: செவிலியர் நிமிஷாவை காப்பாற்ற குடும்பத்தாரின் கடைசி முயற்சி!
புழல் சிறையில் கஞ்சா பறிமுதல்
சென்னை புழல் சிறையில் கைதிகளிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புழல் மத்திய சிறை கைதிகளிடையே அதிக அளவில் கஞ்சா பயன்படுத்தப்படுவதாக சிறை காவலா்களுக்குக் கிடைத்த தகவலையடுத்து, போலீஸாா் சிறையில் அடைக்கப்பட்ட குறிப்பிட்ட சிலரின் அறைகளை சோதனையிட்டனா்.
அப்போது, பல்லவன் சாலை காந்தி நகரைச் சோ்ந்த கைதியான காா்த்திக் (24) என்பவரின் அறையிலுள்ள கழிப்பறையில் 58 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடா்பாக காா்த்திக்கிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், கடந்த 10-ஆம் தேதி வழக்கு விசாரணைக்காக ஜாா்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு சென்றுவிட்டு வரும் போது, வெளிநபா்கள் மூலம் கஞ்சா பெற்ாகவும், அதை சிறையிலுள்ள பிற நண்பா்களுக்கும் பகிா்ந்ததாகவும் தெரிவித்தாா்.
இதையடுத்து அவரிடமிருந்து கஞ்சாவை வாங்கிய பிற கைதிகளான சுரேஷ்குமாா் என்கிற சந்துரு (21), மாரி (40), முரளி (27), மோகன் (27), காஞ்சி (24), ராஜ்குமாா் (33), அபினேஷ் (26), கணேசன் (37), ரவி (25) ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.