ஆம்பூரில் உழவா் சந்தை அமைக்கப்படுமா? பொதுமக்கள், விவசாயிகள் காத்திருப்பு!
பூங்காற்று திரும்புமா: புதிய தொடரின் ஒளிபரப்பு நேரம் அறிவிப்பு!
பூங்காற்று திரும்புமா என்ற தொடரின் ஒளிபரப்பு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கல்யாணம் முதல் காதல்வரை' தொடரின் தழுவலாக எடுக்கப்பட்ட மோதலும் காதலும் தொடரின் நாயகன் சமீர் நடிக்கும் புதிய தொடர் பூங்காற்று திரும்புமா.
இத்தொடரின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட நிலையில், வரும் ஏப். 28 ஆம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பூங்காற்று திரும்புமா தொடரை தாய் கிரேயேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முத்தழகு தொடர் பிரபலம் ஷோபனா நாயகியாக நடிக்கிறார்.
மோதலும் காதலும் தொடரில் நாயகனாக நடித்து தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கியவர் சமீர். தொடர்ந்து, இவர் தனது மனைவியுடன் மிஸ்டர் & மிஸஸ் சின்னதிரை நிகழ்ச்சியில் பங்கேற்று தனது உண்மையான முகத்தைக் காட்டி பிரபலமடைந்தார்.
அதேபோல், முத்தழகு தொடரில் நாயகியாக நடித்து மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர் ஷோபனா. இந்த தொடருக்குப் பிறகு பூங்காற்று திரும்புமா தொடரில் நடிப்பதால் ரசிகர்களிடயே அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மேலும், இவர் கலைஞர் தொலைக்காட்சியில் எஸ். வி. சேகர் உடன் மீனாட்சி சுந்தரம் தொடரில் நடிக்கிறார்.
பூங்காற்று திரும்புமா தொடரின் முன்னோட்டக் காட்சியில், ஒளிபரப்பு தேதி மற்றும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதீத காதலால் மனைவியை சந்தேகிக்கும் கணவன் இடம் சிக்கிக்கொண்டு மனைவி எதிர்கொள்ளும் சவால்களே இத்தொடரின் கதையாக இருக்கும் என முன்னோட்டக் காட்சியின் மூலம் தெரிகிறது.