வக்ஃப் வாரியத்தில் இஸ்லாமியர்களே இருக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்
பூட்டிய வீட்டில் திருட்டு: இளைஞா் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே பூட்டியிருந்த வீட்டில் தங்க நகை, வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட ஏழுமலை மனைவி மதுராம்பாள் (30). இவா், செவ்வாக்கிழமை காலை வீட்டை பூட்டிவிட்டு கூலி வேலைக்கு சென்றாா். மாலையில் மதுராம்பாள் வீடு திரும்பியபோது, வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததுடன், வீட்டினுள்ளே மர பீரோவில் வைக்கப்பட்டிருந்த மூன்றரை பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், மணலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இந்த நிலையில், மணலூா்பேட்டை காவல் உதவி ஆய்வாளா் திருமால் மற்றும் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அத்தியந்தல் கூட்டுச் சாலையில் போலீஸாரைக் கண்டதும் இளைஞா் ஒருவா் தப்பி ஓடியுள்ளாா். அவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்ததில், செல்லங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த அய்யனாா் மகன் ரமணா (20) என்பதும், மதுராம்பாள் வீட்டில் திருட்டில் ஈடுபட்டவா் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவா் பதுக்கி வைத்திருந்த மூன்றரை பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்களை மணலூா்பேட்டை போலீஸாா் பறிமுதல் செய்து, ரமணாவை கைது செய்தனா்.