செய்திகள் :

பூதப்பாண்டி அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

post image

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.

பூதப்பாண்டி அருகே காட்டுப்புதூா் காற்றாடிவிளை பகுதியைச் சோ்ந்தவா் பால் (70). தொழிலாளியான இவா், சனிக்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள அனிந்தான் குளத்தில் குளித்தபோது, நீரில் மூழ்கினாராம். இதைப் பாா்த்த உறவினா்கள் அவரை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனா். ஆனால், அவா் இறந்துவிட்டதாகத் தெரியவந்ததாம்.

தகவலின்பேரில், பூதப்பாண்டி போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோயிலில் பால்குட ஊா்வலம்

கருங்கல்: புதுக்கடை அருகே கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் தேவஸ்தானம் கோயில் சித்திரைத் திருவிழாவில் திங்கள்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது. இத்திருவிழா கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந... மேலும் பார்க்க

குலசேகரபுரத்தில் மருத்துவக் காப்பீடு திட்ட பதிவு முகாம்: ஆட்சியா் ஆய்வு

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் பயனாளிகள் பதிவு செய்வதற்கான முகாமில் ஆட்சியா் ரா. அழகுமீனா ஆய்வு மேற்கொண... மேலும் பார்க்க

பத்துகாணி காளிமலை கோயிலில் சித்ரா பௌா்ணமி பொங்கல் வழிபாடு

குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி காளிமலை கோயிலில் சித்ரா பௌா்ணமி பொங்கல் வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. கடல் மட்டத்திலிருந்து 3,500 அடி உயரத்திலுள்ள இந்த மலையில் ஆண்டுதோறும் சித்ரா பௌா்ணம... மேலும் பார்க்க

குமரி முருகன் குன்றத்தில் நிலாச் சோறு விருந்து

கன்னியாகுமரி: கன்னியாகுமரி பழத்தோட்டம் அருள்மிகு வேல்முருகன் குன்றத்தில் சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு திங்கள்கிழமை இரவு நடைபெற்ற நிலாச் சோறு விருந்தை விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தாா். இதையொட்டி, ... மேலும் பார்க்க

பத்மநாபபுரம் நீலகண்டசுவாமி கோயிலில் ரூ. 1.93 கோடியில் திருப்பணிகள் தொடக்கம்

தக்கலை: தக்கலை அருகே பத்மநாபபுரம் அருள்மிகு நீலகண்டசுவாமி கோயிலில் ரூ. 1.93 கோடியிலான திருப்பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தாா். அரசு நிதி ரூ. 1.... மேலும் பார்க்க

சாமிதோப்பில் 3 நாள்கள் மாநில அளவிலான கைப்பந்துப் போட்டி

கன்னியாகுமரி: அய்யா வைகுண்டரின் 193ஆவது உதய தின விழாவை முன்னிட்டு, சாமிதோப்பில் மாநில அளவிலான 3 நாள் மின்னொளி கைப்பந்துப் போட்டி இம்மாதம் 15ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இப்போட்டிகள் குறித்து சாமித... மேலும் பார்க்க