செய்திகள் :

பூனம் குப்தா: ஜனாதிபதி மாளிகையில் திருமணம் செய்துகொள்ளும் முதல் பெண் - எப்படி சாத்தியம்?

post image

வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக ஒரு திருமணம் நடைபெற உள்ளது. மத்திய ரிசர்வ் காவல் படையின் அதிகாரியான பூனம் குப்தா இந்திய குடியரசுத் தலைவரின் அதிகாரபூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனில் திருமணம் செய்து கொள்ளவுள்ள முதல் நபர் என்ற வரலாற்றை படைக்கவுள்ளார்.

இந்த திருமணம் பிப்ரவரி 12ஆம் தேதி டெல்லியின் ஜனாதிபதி மாளிகையில் உள்ள அன்னை தெரேசா கிரவுண்ட் வளாகத்தில் நடைபெற உள்ளது.

ராஷ்டிரபதி பவனில் திருமணம் செய்து கொள்ளும் முதல் நபராக வரலாறு படைத்துள்ளார் பூனம் குப்தா. இவரின் வருங்கால கணவரும் சி.ஆர்.பி.எஃப் அதிகாரி தான். இவர் தற்போது ஜம்மு காஷ்மீரில் பணிபுரிகிறார். தற்போது ஜனாதிபதி மாளிகையில் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள குப்தா, தனது சிறந்த சேவை காரணமாக இந்த மதிப்புமிக்க இடத்தில் திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

பூனம் குப்தா தனது சேவை மற்றும் தலைமைத்துவத்திற்காக பாராட்டை பெற்றிருக்கிறார். 74 ஆவது குடியரசு தின அணிவகுப்பின்போது அவர் அனைத்து பெண்களும் அடங்கிய ஒரு படைப்பிரிவை வழிநடத்தி தனது சிறந்த தலைமைத்துவத்தையும், அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஜனாதிபதி மாளிகையில் திருமணம் எப்படி?

ஜனாதிபதி மாளிகையில் திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பை பூனம் குப்தா எவ்வாறு பெற்றார் என்பது குறித்து பலரின் மனதில் கேள்வி இருக்கும். ஜனாதிபதி திரௌபதி முர்மு, குப்தாவின் சேவையில் அவர் கடுமையான விதிகளை பின்பற்றுதல் காரணமாக அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த நடவடிக்கை சி.ஆர்.பி.எஃப் மீதான குப்தாவின் அர்ப்பணிப்பையும் தேசத்திற்கான அவரது சிறந்த சேவையும் அங்கீகரிப்பதாக பார்க்கப்படுகிறது.

யார் இந்த பூனம் குப்தா?

மத்தியப் பிரதேசத்தின் சிவபுரியைச் சேர்ந்த பூனம் குப்தா, தனது கல்வி மற்றும் தொழில் வாழ்க்கையில் எப்போதும் மிகுந்த அர்ப்பணிப்பைக் காட்டி வருகிறார். கணிதத்தில் பட்டம், ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் மற்றும் குவாலியரில் உள்ள ஜிவாஜி பல்கலைக்கழகத்தில் கல்வியில் இளங்கலை (பி.எட்) பட்டம் பெற்றுள்ளார்.

2018 ஆம் ஆண்டில், பூனம் யுபிஎஸ்சி தேர்வில் 81 வது இடத்தைப் பிடித்தார். இது சி.ஆர்.பி.எஃப்-இல் உதவி கமாண்டன்ட் பதவிக்கு வழிவகுத்தது. ராஷ்டிரபதி பவனில் பணிபுரிவதற்கு முன்பு, பூனம் பீகாரின் நக்சல் பாதிப்பு மண்டலங்கள் உட்பட சவாலான மற்றும் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் பணியாற்றிருக்கிறார்.

அவரது கடின உழைப்பும் உறுதியும் இந்தியா முழுவதும் உள்ள பல இளம் பெண்களுக்கு ஒரு உத்வேகமாக அமைந்துள்ளது.

1000-க்கு 'T' பதிலாக ஏன் 'K' பயன்படுத்தப்படுகிறது? - பின்னால் இருக்கும் சுவாரஸ்ய தகவல் தெரியுமா?

எண்களில் ஆயிரத்தை 1k என்று குறிப்பதை நாம் பார்த்திருப்போம். மில்லியனுக்கு 'M' என்ற வார்த்தையும் பில்லியனுக்கு 'B' என்ற வார்த்தையும் பயன்படுத்தப்படும் இடத்தில் ஆயிரத்திற்கு ( thousand) மட்டும் ஏன் 'T' ... மேலும் பார்க்க

Ed Sheeran: சென்னையில் கான்சர்ட் நடத்தும் பிரிட்டிஷ் பாடகர்; பேரன்பைக் கொடுக்கும் மக்கள்- யார் இவர்?

இங்கிலாந்தில் பிறந்த இவர் சென்னையில் கான்செட் நடத்தும் அளவிற்கு ரசிகர் கூட்டம் இருப்பது பெரும் பிரமிப்பை உண்டாக்குகிறது. இதனால் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா வந்த இங்கிலா... மேலும் பார்க்க

முதல்வர் பதவி... மும்பை முதல்வர் இல்லத்தில் எருமையை பலியிட்டு பில்லிசூனியம் வைத்தாரா ஏக்நாத் ஷிண்டே?

மகாராஷ்டிராவில் முதல்வராக இருப்பவர்களுக்காக வர்ஷா என்ற அரசின் அதிகாரப்பூர்வ இல்லம் இருக்கிறது. இந்த இல்லத்தில் தான் முதல்வர் மற்ற அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் அதிகாரப்பூர்வ சந்திப்புகளை மேற... மேலும் பார்க்க

காதல் தோல்வி கட்டாயம்; 'Chief Dating Officer' பதவி ஆள்தேடிய நிறுவனம் - முக்கிய கண்டிஷன் இவைதான்!

பெங்களூருவைத் தளமாகக் கொண்ட டாப்மேட் என்ற நிறுவனத்திற்கு தலைமை டேட்டிங் அதிகாரி வேண்டுமென்று சமூக வலைதளங்களில் பதிவிட்டது தற்போது வைரலாகி வருகிறது.இந்தியாவில் பல்வேறு ஸ்டார்ட்டர் நிறுவனங்கள் வந்துவிட்... மேலும் பார்க்க

உடல் நிலை குறித்து தவறான தகவல்; யூடியூப் வீடியோவை நீக்குமாறு ஐஸ்வர்யா ராய் மகள் கோர்ட்டில் வழக்கு!

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா பச்சன் குறித்து அடிக்கடி எதாவது தகவல் வந்து கொண்டே இருக்கிறது. ஐஸ்வர்யா ராய் எங்கு சென்றாலும் தனது மகளை கூடவே அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த 202... மேலும் பார்க்க

``என் பங்கு பாதி உடம்பை பிரித்து கொடு.." - தந்தையின் இறுதிச் சடங்கில் மகன் குடிபோதையில் தகராறு!

குடிகாரர்கள் குடிபோதையில் செய்யும் காரியங்கள் சில நேரம் வேடிக்கையாகவும், வினோதமாகவும் இருக்கும். பல நேரங்களில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தும். மத்திய பிரதேசத்தில் அது போன்ற ஒரு சம்பவத்தால் ஊரே கலகலத்... மேலும் பார்க்க