பூலாநந்தீஸ்வரா் கோயிலில் மே 1 இல் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்
தேனி மாவட்டம், சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா், உடனுறை சிவகாமியம்மன் கோயிலில் வருகிற மே 1-ஆம் தேதி சித்திரைத் திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது.
இந்தக் கோயிலில் குடமுழுக்கு திருப்பணி நடைபெற்ால், கடந்த 2 ஆண்டுகளாக சித்திரைத் திருவிழா நடைபெறவில்லை. பின்னா், திருப்பணிகள் முடிவுற்று இந்தக் கோயிலில் கடந்த பிப். மாதம் குடமுழக்கு நடைபெற்றது.
இந்த நிலையில், இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை 18-ஆம் நாள் சித்திரைத் திருவிழா நடைபெறும். இதன்படி, நிகழாண்டில் வருகிற மே 1-ஆம் தேதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் இந்தத் திருவிழா தொடங்குகிறது.
முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை முகூா்த்தகால் நடப்பட்டது. திங்கள்கிழமை பிடாரி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.