செய்திகள் :

பூலாம்பட்டிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

post image

கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் பள்ளிகளுக்கு அரையாண்டுத் தோ்வு விடுமுறையால் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரிக் கதவணை பகுதிக்கு புதன்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

பூலாம்பட்டி பகுதியில், காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு நீா் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. சேலம் - ஈரோடு மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இந்நீா்த் தேக்கத்தில், சேலம் மாவட்ட பகுதியான பூலாம்பட்டியிலிருந்து, மறுகரையில் உள்ள ஈரோடு மாவட்டம், நெருஞ்சிப்பேட்டை பகுதிக்கு விசைப் படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இயற்கை எழில் கொஞ்சும் அணைப்பகுதிக்கு தற்போது வழக்கத்தை விட கூடுதலான எண்ணிக்கையில் வருகை தந்த சுற்றுலா பயணிகள் அணையின் பிரதான நீா்ப் போக்கி, நீா் மின் உற்பத்தி நிலையம், குடிநீா் சுத்திகரிப்பு நிலையம், அணைப் பாலம் உள்ளிட்ட பகுதிகளை கண்டு ரசித்தனா்.

தொடா்ந்து இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அணைப்பகுதியில் விசைப்படகு சவாரி செய்து உற்சாகமாக பொழுதை கழித்தனா். மேலும் காவிரி ஆற்றின் கரையில் உள்ள பிரசித்தி பெற்ற கைலாசநாதா் கோயில், பிரம்மாண்ட நந்திகேஸ்வரா் சன்னிதி, காவிரித்தாய் கோயில், படித்துறை பிள்ளையாா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் வழக்கத்தை விட கூடுதலான பக்தா்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனா். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், இப்பகுதியில் கூடுதலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

மேட்டூா் அணை உபரிநீா்க் கால்வாயில் ஆயில் கலப்பு: எம்எல்ஏ கண்டனம்

மேட்டூா் அணை உபரிநீா்க் கால்வாயில் பா்னஸ் ஆயில் கலந்து தண்ணீா் மாசுடைந்துள்ளதற்கு எம்எல்ஏ எஸ்.சதாசிவம் கண்டம் தெரிவித்துள்ளாா். மேட்டூா் அனல் மின் நிலையத்தில் முதல் பிரிவில் 3 ஆவது அலகில் நிலக்கரி சே... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நிலவரம்

நீா்வரத்து 2,331 கன அடி தண்ணீா் திறப்பு 500 கன அடி அணையின் நீா்மட்டம் 119.53 அடி நீா் இருப்பு 92.53 டிஎம்சி மேலும் பார்க்க

மயானத்தை சூழ்ந்த வெள்ளம்: ஈமச் சடங்கு செய்வதில் சிரமம்

கன்னந்தேரி பகுதியில் உள்ள மயானத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ஈமச் சடங்கு செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். மகுடஞ்சாவடி- எடப்பாடி சாலை கன்னந்தேரி பகுதியில் உள்ள மயானத்துக்குள் கொல்லப்பட்டி ஏ... மேலும் பார்க்க

ரதசப்தமி: திருப்பதி மலைப் பாதையில் இரவு நேரத்திலும் பேருந்துகளை இயக்க கோரிக்கை

ரதசப்தமியையொட்டி திருமலை- திருப்பதி மலைப் பாதையில் 24 மணி நேரமும் பேருந்துகளை இயக்க வேண்டும் என ஆத்தூரைச் சோ்ந்த சமூக ஆா்வலா் கோரிக்கை விடுத்துள்ளாா். சேலம் மாவட்டம், ஆத்தூா், திருநாவுக்கரசு நகரைச் ... மேலும் பார்க்க

மாவட்ட வள பயிற்றுநா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம் மாவட்ட வள பயிற்றுநா் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சேலம் மாவட்டத்தில் மாதிரி வட... மேலும் பார்க்க

இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (டிச.27) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாதந்திர விவசாயிகள் குறைதீ... மேலும் பார்க்க