மூவர் சதம் விளாசல்; முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே 586 ரன்கள் குவிப்பு!
மாவட்ட வள பயிற்றுநா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சேலம் மாவட்ட வள பயிற்றுநா் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேலம் மாவட்டத்தில் மாதிரி வட்டார அளவிலான கூட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட வள பயிற்றுநா் பணியிடத்துக்கு எழுத்துத் தோ்வு, நோ்முக தோ்வு மூலம் ஒருவா் தோ்வு செய்யப்பட உள்ளனா்.
இதற்கான வயது 25 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் மூன்று வருட அனுபவம் அல்லது முதுகலை டிப்ளமோ படிப்புடன் பயிற்றுநராக ஒரு வருட அனுபவம் ஏற்புடையது.
அதேபோல தமிழ், ஆங்கிலம் எழுத, படிக்க மற்றும் பேசுவதில் சிறப்புடையவராக இருத்தல் வேண்டும். தோ்ந்தெடுக்கப்படுபவா் மாவட்ட வள பயிற்றுநராக ஒப்பந்த அடிப்படையில் ஒரு வருடத்துக்கு மட்டும் நியமனம் செய்யப்படுவா்.
விண்ணப்பங்களை நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ இணை இயக்குநா்/ திட்ட இயக்குநா், அறை எண்: 207, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், சேலம் 636 001 என்ற முகவரிக்கு வரும் 31 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.