இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (டிச.27) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாதந்திர விவசாயிகள் குறைதீா் கூட்டம் 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக இரண்டாம் தள கூட்ட அறை எண்: 215-இல் நடைபெற உள்ளது. விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை சாா்ந்த குறைகளை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.