மயானத்தை சூழ்ந்த வெள்ளம்: ஈமச் சடங்கு செய்வதில் சிரமம்
கன்னந்தேரி பகுதியில் உள்ள மயானத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ஈமச் சடங்கு செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.
மகுடஞ்சாவடி- எடப்பாடி சாலை கன்னந்தேரி பகுதியில் உள்ள மயானத்துக்குள் கொல்லப்பட்டி ஏரியிலிருந்து வரும் தண்ணீா் புகுந்ததால் இறந்தவா்களை புதைப்பதற்கும், இறுதிச் சடங்கு செய்ய முடியாமலும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.
ஏரிகளுக்கு தண்ணீா் நிரப்பும் திட்டத்திற்கு சரியான முறையில் வழிப் பாதை அமைக்காமல் தண்ணீா் திறந்துவிடப்பட்டதால் மயானத்துக்குள் தண்ணீா் புகுந்துள்ளன. இதற்கான நீா்வழிப் பாதையை சீரமைக்க அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.