ஆசிய கோப்பையில் இந்திய அணி சாம்பியன்! பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை பந்தாடியது...
பெங்களூரில் வீடுகளின் விற்பனை 21% அதிகரிக்கும்: ப்ராப் ஈக்விட்டி
புதுதில்லி: பெங்களூரில் வீட்டுச் சந்தை வலுவாக உள்ளதாகவும், ஜூலை முதல் செப்டம்பர் வரையான மாதங்களில் அதன் விற்பனை 21 சதவிகிதம் அதிகரித்து சுமார் 16,840 வீடுகள் விற்பனையாகும் என்றது ப்ராப் ஈக்விட்டி.
ரியல் எஸ்டேட் தரவு நிறுவனமான ப்ராப் ஈக்விட்டி, தரவுகளின் அடிப்படையில், 2025 ஜனவரி முதல் செப்டம்பர் வரையான காலகட்டத்தில் குடியிருப்பு விற்பனை 49,559 ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதாக தெரிவித்தது. இதுவே அதன் முந்தை ஆண்டு இதே காலத்தில் வீடுகளின் விற்பனை 46,392ஆக இருந்தது.
பண்டிகைக் காலம் தொடங்குவதால், ஆண்டின் நான்காவது காலாண்டில் பெங்களூருவில் விற்பனை உயரும் என்று கருதும் நிலையில், 2024ல் வீடுகளின் விற்பனை 61,116ஆக இருந்தது. இதுவே அதன் முந்தைய ஆண்டு இது 66,600 வீடுகளாக இருந்தது என்றது.
கோவிட் தொற்றுநோய் காலத்தில் (2020), வீடுகளின் விற்பனை 34,480 ஆக இருந்தது. ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் தேவை அதிகரிபால் சந்தை மீண்டும் எழுந்தது.
2021ல் வீடுகளின் விற்பனை 43,181ஆக இருந்த நிலையில், 2022ல் அது 60,391 வீடுகளாக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: அமெரிக்க வரி விதிப்பால் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆபத்து: கிரிசில்