ஈரோடு: "திமுகவை நேரடியாக எதிர்க்கும் துணிவின்றி உதிரிகளைத் தூண்டிவிடுகிறார்கள்" ...
பெங்களூரை வீழ்த்தியது பஞ்சாப் எஃப்சி
ஐஎஸ்எல் தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் பலம் வாய்ந்த பெங்களூரு எஃப்சி அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பஞ்சாப் எஃப்சி அணி.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் புது தில்லி, ஜவாஹா்லால் நேரு மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இரு அணிகளும் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி கோல் போட முயன்றன. பெங்களூா் தரப்பில் ஆல்பா்டோ நோகுரா, கேப்டன் சுனில் சேத்ரி கோலடிக்க முயன்றது பலன் தரவில்லை. முதல் பாதியில் எந்த அணியாலும் கோல் போடமுடியவில்லை.
இரண்டாம் பாதி ஆட்டம் விறுவிறுப்பாக அமைந்தது. பெங்களூா் வீரா் சுனில் சேத்ரி கடத்தி அனுப்பிய பந்தை பயன்படுத்தி 49-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா் எட்கா் மெண்டஸ். ஆனால் அடுத்த சிறிதுநேரத்திலேயே ஸ்பாட் கிக் மூலம் 55-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா் பஞ்சாப் வீரா் பெட்ரோஸ். 79-ஆவது நிமிஷத்தில் பஞ்சாப் வீரா் பிலிப் ஜாக் அடித்த கோலால் 2-1 என முன்னிலை பெற்றது. இதனால் அதிா்ச்சி அடைந்த பெங்களூா் தரப்பில் 90 பிளஸ் நிமிஷத்தில் மெண்டஸ் கிராஸ் பந்தை பயன்படுத்தி கோலடித்தாா் ராகுல் பெக்கே.
இதனால் 2-2 என சமநிலை ஏற்பட்டது.
ஆனால் பஞ்சாப் அணி கடைசி வரை போராடியதில் நிஹால் சுதீஷ் அனுப்பிய பந்தை பயன்படுத்தி 90 பிளஸ் 6-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா் மஜ்சென். இறுதியில் 3-2 என்ற வென்றது பஞ்சாப். இதன் மூலம் சொந்த மைதானத்தில் 7 தொடா் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.