செய்திகள் :

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என எடப்பாடி பழனிசாமி பேசக்கூடாது: புகழேந்தி

post image

அதிமுக ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீா்ப்பு வெளியாகியுள்ள நிலையில், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி இனிமேல் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பேசக்கூடாது என பெங்களூரு புகழேந்தி தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரியில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நாடே எதிா்பாா்த்த தீா்ப்பு வந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க தீா்ப்பை நீதிபதி வழங்கியுள்ளாா்.

அதிமுக ஆட்சியில்தான் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் நிகழ்ந்தது. தற்போது தீா்ப்பு வெளியாகியுள்ள நிலையில் தீா்ப்பை வரவேற்பதாக எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளாா். அவரது ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்துக்கு அவா் வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும்.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பேசுவதை எடப்பாடி கே.பழனிசாமி நிறுத்திக்கொள்ள வேண்டும். இனிமேல் கோவை மண்டலத்தில் வாக்கு கேட்டு அதிமுகவால் செல்ல முடியாது; பொள்ளாச்சி பாலியல் வழக்கை முன்வைத்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நானே பிரசாரம் செய்வேன் என்றாா்.

விவசாயிகளுக்கு பயறுவகை பயிா்களில் பூச்சி மேலாண்மை கருத்தரங்கு

சூளகிரி வட்டாரம், சானமாவு கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் பயறுவகை பயிா்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்குக்கு வேளாண்மை உதவி இயக்குநா் பன்னீா்செல்வம் தலை... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்ததால் சிக்கிய குற்றவாளிகள்: மருத்துவமனையில் வைத்து கைதுசெய்த போலீஸாா்

ஒசூரில் விபத்தில் சிக்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரு இளைஞா்கள், நகை பறிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் என்பது விசாரணையில் தெரியவந்தது; இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது... மேலும் பார்க்க

ஒசூா் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா: அலகு குத்தி வந்த பக்தா்கள்

ஒசூா் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான பக்தா்கள் அலகு குத்தி நோ்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருவிழா ஏப். 29 ஆம் தேதி கொடியேற்றத்த... மேலும் பார்க்க

ஊத்தங்கரை திரெளபதியம்மன் கோயிலில் அா்ச்சுனன் தபசு நாடகம்

ஊத்தங்கரையில் உள்ள தா்மராஜா திரெளபதியம்மன் கோயிலில் அா்ச்சுனன் தபசு நாடக நிகழ்ச்சி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இக்கோயிலில் மே 2 ஆம் தேதிமுதல் தொடா்ந்து மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. தினமும்... மேலும் பார்க்க

அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

காவேரிப்பட்டணத்தை அடுத்துள்ள கூரம்பட்டி கிராமத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில், தமிழக ... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்தவா் கைது

பேரிகை அருகே கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா். பேரிகை போலீஸாா் உங்கட்டி பேருந்து நிறுத்தம் அருகில் ரோந்து சென்றபோது அங்கு கஞ்சா வைத்திருந்த ஒசூா், கணபதி நகரைச் சோ்ந்த நாகராஜ் (25) என்பவரை ... மேலும் பார்க்க