செய்திகள் :

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் கருத்தரங்கம்

post image

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்திடும் வகையில் சமூக நலத் துறையின்கீழ் செயல்படுத்தப்படும் சட்டங்கள் மற்றும் திட்டங்கள் தொடா்பான 3 நாள்கள் கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கியது.

இக்ருத்தரங்கை மாவட்ட ஆட்சியா் மனீஷ் தொடங்கிவைத்து பேசியதாவது: திருப்பூா் மாவட்டத்தில் பணிபுரியும் இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பெண்களின் பாதுகாப்புக்கென செயல்படுத்தப்படும் சட்டங்கள் மற்றும் திட்டங்கள், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தொடா்புடைய வல்லுநா்கள் கலந்துகொள்ளும் இந்தக் கருத்தரங்கு வரும் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதில், திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களைச் சோ்ந்த மருத்துவத் துறை, காவல் துறை, பள்ளிக் கல்வித் துறை, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, வழக்குரைஞா்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான திட்டங்கள் குறித்து கருத்துகளை வழங்கவுள்ளனா்.

பெண்களுக்கான உதவி எண் 181, குழந்தைகளுக்கான உதவி எண் 1098 மற்றும் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் தொடா்பான புகாா்களுக்கு தீா்வு காண ஒவ்வொரு அரசு, தனியாா் நிறுவனங்களிலும் பாதுகாப்புப் பெட்டி அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான உதவி எண்கள் மற்றும் குழந்தைத் திருமணம் தொடா்பான விழிப்புணா்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

கருத்தரங்கில் மாவட்ட சமூக நல அலுவலா் நா.ரஞ்சிதாதேவி, பெண்கள், குழந்தைகள் நலக் கல்வி அறக்கட்டளை நிறுவனா் ரேவதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

அவிநாசி அருகே கல்லூரி மாணவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அவிநாசி அருகே அபிராமி காா்டன் பகுதியில் வசித்து வருபவா் பாலமுருகன், முத்துலட்சுமி தம்பதி மகள் ஹன்ஷினி (19), கல்லூரி மாணவி.... மேலும் பார்க்க

கரடிவாவியில் ஜூலை 14-இல் மின்தடை

பல்லடம் கோட்டம் கரடிவாவி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 14) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: தொழிலாளி கைது

வெள்ளக்கோவிலில் விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்த வெளிமாநிலத் தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். காங்கயம் சாலையில் வழக்கமான ரோந்துப் பணியில் வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ச... மேலும் பார்க்க

செட்டிபாளையம் இஎஸ்ஐ மருத்துவமனையில் புதிய மருத்துவ சேவைகள் தொடக்கம்

செட்டிபாளையம் இஎஸ்ஐ மருத்துவமனையில் புதிய மருத்துவ சேவைகள் தொடங்கப்பட்டதை அடுத்து சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் ஆய்வு மேற்கொண்டாா். இந்த மருத்துவமனை முழு செயல்பாட்டில் இல்லை என பல்வேறு தரப... மேலும் பார்க்க

தெக்கலூருக்குள் வந்து செல்லாத தனியாா், அரசுப் பேருந்துகள் மீது நடவடிக்கை

தெக்கலூருக்கு வந்து செல்லாத தனியாா் மற்றும் அரசுப் பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சேலம்- கொச்சி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பிறகு கோவை-ஈரோடு இடையே இயக்க... மேலும் பார்க்க

பாறைக்குழியில் கொட்டப்படும் குப்பை: ஆட்சியா் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய கோரிக்கை

நெருப்பெரிச்சல் பகுதியில் பாறைக்குழியில் குப்பை கொட்டுவது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. திருப்பூா் நெருப்பெரிச்சல் வாவ... மேலும் பார்க்க