செய்திகள் :

'பெண்ணால் ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்த முடியுமா?' - விடை தேடும் நிகழ்ச்சி

post image

மேஜிக் 20 தமிழ் நிறுவனத்தின் சார்பில் மேஜிக் பெண்கள் 2.0 நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளது. பெண் ஆளுமைகள் ஒன்றிணையும் இந்த நிகழ்ச்சி வரும் மார்ச் 29-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும்.

இந்த நிகழ்ச்சியானது சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் விவாதங்கள், அனைவரின் ஈடுபாட்டுடன் கூடிய குழு அமர்வுகள் மற்றும் சிந்தனையைத் தூண்டும் முக்கிய கருத்துகள் மூலம் பெண்களை ஊக்குவிக்கும் ஒரு மேடை.

இதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண் தலைவர்கள், ஆளுமைகள் ஒன்றிணைந்து மனநலம், பெண்களுக்கான தனிநபர் நிதி மற்றும் தொழில்முனைவு குறித்த பார்வையையும், சிந்தனைகளையும் பகிர்ந்துகொள்ள உள்ளனர்.

முக்கிய உரைகள்:

நிகழ்ச்சியில் 'மனநலம் மற்றும் நல்வாழ்வு' என்ற தலைப்பில் மனநலப் பயிற்சியாளர் மற்றும் தொழில்முனைவோருமான மாலிகா ரவிக்குமார் பேசவிருக்கிறார். தொடர்ந்து 'பெண்களுக்கான தனிப்பட்ட நிதி' என்ற தலைப்பில் பிரைம் இன்வெஸ்டர் நிறுவனத்தின் இணை நிறுவனர் வித்யா பாலா பேசவிருக்கிறார்.

'பெண் தொழில்முனைவோர் மற்றும் சாதனையாளர்கள்' என்ற தலைப்பில் குழு விவாதம் நடைபெற உள்ளது. இதன் நடுவராக பிளிங்க் ஸ்மார்ட் ஹோம்ஸ் நிறுவனர் ஐஸ்வர்யா செந்தில்நாதன் செயல்பட உள்ளார்.  நடிகை நீலிமா ராணி, நாடாளுமன்ற உறுப்பினர் சுதா, தமிழ்நாடு மாநில திட்டக் கமிஷன் உறுப்பினர் செயலர் சுதா ராமன், டிக்கெட் 9‌ நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி யாழினி சண்முகம் ஆகியோர் பேச்சாளர்களாகக் களமிறங்க உள்ளனர்.

'ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்துவது எப்படி' என்ற தலைப்பில் தொடர்ந்து  நடைபெறும் கலந்துரையாடலின் நடுவராக SPIKRA நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராதா ரங்காச்சாரி,  செயல்பட உள்ளார். இவருடன் இணைந்து ஸ்ரீராம் கேபிடல் பிரைவேட். லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுபஸ்ரீ ஸ்ரீராம் பங்கேற்கவிருக்கிறார்.

சென்னை, அண்ணாசாலையில் உள்ள எம்.எம்.ஏ வளாகத்தில் வரும் சனிக்கிழமை (மார்ச் 29) மாலை 5.30 மணி முதல் நிகழ்ச்சி நடைபெறும். இதில் கலந்துகொள்வோர் முன்பதிவு செய்வது அவசியம். முன்பதிவுக்கு இந்த லிங்கில் ( https://www.theticket9.com/event/magic-pengal-2-0)  க்ளிக் செய்யவும்.

தொடர்புக்கு: 7845569820