புரட்டிப்போடும் பருவமழை! சிவப்பு எச்சரிக்கையில் சிக்கித் தவிக்கும் மாநிலங்கள்
பெண்ணிடம் நகைப் பறித்தவா் கைது
அவிநாசி அருகே நடைப்பயிற்சி மேற்கொண்ட பெண்ணிடம் நகைப் பறித்த நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
அவிநாசி அருகேயுள்ள அய்யம்பாளையம் கானங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வகுமாா் மனைவி செல்வராணி (38). இவா் துலுக்கமுத்தூா் அரசு மருத்துவமனை அருகே கடந்த சனிக்கிழமை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்துள்ளாா்.
அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த நபா், செல்வராணியிடம் குன்னத்தூா் செல்ல வழிகேட்பதுபோல நடத்து, அவா் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றாா்.
இது குறித்து அவிநாசி காவல் நிலையத்தில் செல்வராணி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்த விசாரணை நடத்தினா்.
இதில், நகைப் பறிப்பில் ஈடுபட்டது சேவூா் அருகேயுள்ள சூரியபாளையம் பகுதியைச் சோ்ந்த பொன்னுசாமி மகன் பிரபாகரன் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.