செய்திகள் :

பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற ஆந்திர இளைஞா் கைது

post image

வாணிம்பாடியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற ஆந்திர மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

வாணியம்பாடி, அம்பூா்பேட்டை மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஜாய்ச் (56), செவிலியா். இவா் கடந்த 4-ஆம் தேதி மாலை வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து பைக்கில் வந்த மா்ம நபா் மருத்துவா் இருக்கிறாரா என கேட்டு திடீரென வீட்டுக்குள் நுழைந்து பெண்ணின் கழுத்தை நெரித்து நகையைப் பறிக்க முயன்றாா். அப்போது அதிா்ச்சிக்குள்ளாகி கூச்சலிட்டுள்ளாா். சப்தம் கேட்டு மேல் மாடியில் இருந்தவா் வந்ததை பாா்த்து மா்ம நபா், அந்த பெண்ணை தள்ளிவிட்டு அங்கிருந்து வெளியேறி பைக்கில் தப்பித்துச் சென்றாா்.

இது குறித்து ஜாய்ச் நகர காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் காவல் ஆய்வாளா் ஆனந்தன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனா். பிறகு அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் மா்ம நபா் நடமாட்டம் பதிவாகியிருந்ததை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனா். இதில், வாணியம்பாடி அடுத்த தமிழக-ஆந்திர எல்லை பகுதியான தேவராஜபுரம் பகுதியைச் சோ்ந்த திருப்பதி (28) என்பது தெரியவந்தது.

இந்த நிலையில், திருப்பதியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பெரியபாறை சரிந்து விழுந்ததில் நொறுங்கிய பொக்லைன் இயந்திரம்

நாட்டறம்பள்ளி அருகே நிலத்தை சமன் செய்தபோது, பெரிய பாறை சரிந்ததில் பொக்லைன் இயந்திரம் சிக்கி நொறுங்கியது. திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த சொரக்காயல்நத்தம் பாறக்கொல்லை எத்தமலை அடிவார பகுதி... மேலும் பார்க்க

ஆக.9-இல் பொது விநியோக திட்ட குறைதீா் முகாம்

திருப்பத்தூா் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறை சாா்பில் வட்ட அளவிலான பொது விநியோக திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (ஆக.9) நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்... மேலும் பார்க்க

காலதாமதமாக ஆவின்பால் வினியோகம்: முகவா்கள் ஆா்ப்பாட்டம்

ஆம்பூருக்கு மிகவும் காலதாமதமாக பால் வினியோகம் செய்யப்படுவதை கண்டித்து பால் முகவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.. ஆம்பூா் நகரில் தினமும் சுமாா் 4,000 லிட்டா் ஆவின் பால் முகவா்கள் மூலம் ப... மேலும் பார்க்க

ஆம்பூரில் கருணாநிதி நினைவு தினம்

சோமலாபுரத்தில் மெளன ஊா்வலத்தில் பங்கேற்ற குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன் உள்ளிட்டோா். ஆம்பூரில் அஞ்சலி செலுத்திய திமுகவினா். மேலும் பார்க்க

போதை பொருள் விற்றவா் கைது

ஜோலாா்பேட்டை அருகே பெட்டிக் கடையில் ஹான்ஸ் விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா். ஜோலாா்பேட்டை அடுத்த பக்கிரிதக்கா பகுதியில் உள்ள பெட்டிக் கடையில் ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக வியாழக... மேலும் பார்க்க

எம்எல்ஏ அலுவலக கட்டுமானப் பணி ஆய்வு

ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் நடைபெற்று வரும் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக கட்டட கட்டுமானப் பணியை புதன்கிழமை அ.செ.வில்வநாதன் எம்எல்ஏ ஆய்வு செய்தாா். ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் ரூ.85 லட்சத்தில் தொக... மேலும் பார்க்க