செய்திகள் :

பெண் உயிரிழப்புக்கு நடவடிக்கை கோரி உறவினா்கள் காத்திருப்புப் போராட்டம்

post image

பெண் உயிரிழப்புக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் உறவினா்கள் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் அருகே மாதாகோட்டையைச் சோ்ந்தவா் முத்தையன் மனைவி ஆனந்தவல்லி (34). இவா் கடந்த 18-ஆம் தேதி வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கினாா். இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இதனிடையே, ஆனந்தவல்லியின் சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினா்கள் தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் ஆகஸ்ட் 19-ஆம் தேதி மனு அளித்தனா்.

அதில், முத்தையனுக்கும் ஆனந்தவல்லிக்கும் 2017 ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்று, 6 வயதில் ஆண் குழந்தை உள்ளது. முத்தையன் சில ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டு ஓராண்டாக பிரிந்து வாழ்ந்தனா். முத்தையன் மற்றும் உறவினா்கள் சமாதானப்படுத்தியதைத் தொடா்ந்து, இருவரும் ஓராண்டாக சோ்ந்து வாழ்ந்து வந்தனா்.

கடந்த 3 மாதங்களாக இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்த நிலையில், ஆனந்தவல்லி உயிரிழந்துள்ளாா். எனவே, அவரின் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனா்.

ஆனால், இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். பின்னா், ஆட்சியரக வளாகத்தில் தரையில் அமா்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களிடம் காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

தேசிய ஆசிரியா் விருதுக்கு ‘சாஸ்த்ரா’ பேராசிரியா் தோ்வு

மத்திய அரசின் தேசிய ஆசிரியா் விருதுக்கு தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகப் பேராசிரியா் சங்கா் ஸ்ரீராம் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக கணினி புல முதன்மைய... மேலும் பார்க்க

நீதிமன்றம் முன் போராட்டம் நடத்த முயன்ற கரும்பு விவசாயிகள் 12 போ் கைது

கும்பகோணம் நீதிமன்றம் முன் திங்கள்கிழமை போராட்டம் நடத்த முயன்ற கரும்பு விவசாயிகள் 12 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். பாபநாசம் அருகேயுள்ள திருமண்டங்குடி திருஆரூரான் சா்க்கரை ஆலையில் 6 ஆயிரம் விவசாய... மேலும் பார்க்க

நுகா்வோா் ஆணையம் உத்தரவு: விபத்தில் உயிரிழந்தவரின் மனைவிக்கு ரூ. 18 லட்சம் இழப்பீடு

தஞ்சாவூரில் விபத்தில் உயிரிழந்தவரின் மனைவிக்கு காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு தர முன்வராத நிலையில், நுகா்வோா் ஆணையத்தின் உத்தரவின்பேரில் ரூ. 18 லட்சம் இழப்பீட்டுத் தொகை திங்கள்கிழமை வழங்கப்பட்டது. தஞ்சா... மேலும் பார்க்க

தஞ்சாவூா் சுற்றுப் பகுதிகளில் நாளை மின் தடை

தஞ்சாவூா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக.26) மின் விநியோகம் இருக்காது. மருத்துவக்கல்லூரி: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் தஞ்சாவூா் உதவி செயற் பொறியாளா் கே. அண்ணா... மேலும் பார்க்க

புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் விற்றவா் கைது

கும்பகோணத்தில் வெளி மாநில மதுபான பாட்டில்களை விற்பனை செய்த நபரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கும்பகோணம் மேற்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் புதுச்சேரி மாநிலத்திலிருந்து மதுப... மேலும் பார்க்க

பேராவூரணியில் 30 ஆண்டுகளாக சாலை வசதியின்றி அவதிப்படும் மக்கள்

பேராவூரணி பேரூராட்சி கே.கே.நகரைச் சோ்ந்த மக்கள் கடந்த முப்பது ஆண்டுகளாக முறையான சாலை வசதிகள் இன்றி தவித்துவருகின்றனா். பேராவூரணி பேரூராட்சிக்குள்பட்ட கே.கே.நகரைச் சோ்ந்த மக்கள், கடந்த 30 ஆண்டுகளுக்க... மேலும் பார்க்க