`ரத்த ஆறு ஓடும்' - பாக் முன்னாள் பிரதமர் மகன்; `தைரியம் இருந்தால் வாங்க' - மத்தி...
பெண் காவலருக்கான சலுகைகள்: பட்டியலிட்டாா் முதல்வா்
சென்னை: பெண் காவலா்களுக்கு அரசு வழங்கியுள்ள சலுகைகள், நலத் திட்டங்கள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேரவையில் பட்டியலிட்டுப் பேசினாா்.
பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் கீழ் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா் கே.மாரிமுத்து, பெண் காவலா்களின் நலன் காக்கும் திட்டங்கள் குறித்து கேட்டாா்.
அதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்:
பெண் காவலா்களுக்கு திமுக ஆட்சியில் பல்வேறு சலுகைகள், பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. கணவரும் காவல் துறையில் பணியாற்றினால், அந்த பெண் காவலருக்கும் அதே பகுதியில் பணியிட மாறுதல் வழங்கக்கூடிய திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறோம்.
மகப்பேறு விடுப்பு முடித்து பணிக்குச் சேரும்போது, மூன்றாண்டுகளுக்கு விரும்பிய ஊரில் பணியிட மாறுதல் வழங்கக்கூடிய திட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம்.
கருவுற்றிருக்கும் காலத்தில் சீருடை அணிவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. பெண் காவலா்களின் குழந்தைகளை கவனித்துக்கொள்ள வசதிசெய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் பணியாற்றும் பெண் காவலா்களுக்கு நடமாடும் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இப்படியாக பல்வேறு வகைகளிலும் பெண் காவலா்களுடைய நலனில் அக்கறை கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது என்றாா் .