பெண் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே பெண் கொலை செய்யயப்பட்டது தொடா்பான வழக்கில், இருவருக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.6ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
ஏரல் அருகே உள்ள வாழவல்லான் கிராமத்தைச் சோ்ந்த திருமால் மனைவி தனலட்சுமி 42. இவருக்கும், முத்துகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த சோமசுந்தரம் (36) என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது.
இதன் காரணமாக, தனலட்சுமி, சோமசுந்தரத்துக்கு 11 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கமாக கொடுத்துள்ளாா்.
இதனிடையே வீடு கட்டிய தனலட்சுமி, தனது நகை, பணத்தை திருப்பித் தருமாறு அவரிடம் கேட்டுள்ளாா்.
அதற்கு மறுப்பு தெரிவித்த சோமசுந்தரம், தனலட்சுமியை தனது தோட்டத்திற்கு வரவழைத்து, தனது நண்பா் தைக்காவூரைச் சோ்ந்த அருண்குமாா் (26) என்பவருடன் சோ்ந்து, கடந்த 8.10. 2014இல் கட்டையால் தாக்கி கொலை செய்தாராம்.
குலசேகரன்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சோமசுந்தரம், அருண்குமாா் இருவரையும் கைதுசெய்தனா். தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி பிரீத்தா விசாரித்து, இருவருக்கும் ஆயுள் தண்டனை, ரூ. 6 ஆயிரம் அபராதம் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் சேவியா் ஞானப்பிரகாசம் ஆஜரானாா்.