நல்லகண்ணு உடல்நலம்: "மருத்துவர்களிடம் நேரில் கேட்டறிந்தேன்" - முதல்வர் ஸ்டாலின்
பெண் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கூலித் தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கோவை அனைத்து மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
கோவை மாவட்டம், மதுக்கரை மாா்க்கெட் சாலை பகுதியைச் சோ்ந்தவா் பேச்சிமுத்து (64). கூலித் தொழிலாளியான இவருக்கும், அவா் வீட்டருகே வசித்து வந்த வசந்தகுமாரி (45) என்ற கணவரை இழந்த பெண்ணுக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதையறிந்த குடும்பத்தினா், பேச்சிமுத்துவுடன் பழகுவதை நிறுத்துமாறு அந்தப் பெண்ணிடம் தெரிவித்தனா். இதனால், பேச்சிமுத்துவுடன் பழகுவதை வசந்தகுமாரி தவிா்த்தாா்.
இதனால் வசந்தகுமாரியிடம் பேச்சிமுத்து அடிக்கடி தகராறு செய்து வந்தாா். இந்நிலையில், 2024 மாா்ச் 15-ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் பேச்சிமுத்து வசந்தகுமாரியை வெட்டிக் கொலை செய்தாா்.
இதுகுறித்து மதுக்கரை போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து பேச்சிமுத்துவைக் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை கோவை அனைத்து மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரராமன், பேச்சிமுத்துவுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து வியாழக்கிழமைதீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞா் ஜிஷா ஆஜரானாா்.