Janhvi Kapoor: அம்மாவின் சேலையில் ஜொலித்த ஜான்வி கபூர் - க்ளாசிக் க்ளிக்ஸ்!
பெண் தூக்கிட்டுத் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
வானூா் வட்டம், பெரிய முதலியாா்சாவடி பாரதி நகரைச் சோ்ந்தவா் தினேஷ்குமாா் மனைவி பிரியா(35). இவா், கணவரிடமிருந்து விவாகரத்துப் பெற்று தனியாக மகள் தியா(13) வுடன் வசித்து வந்தாா்.
கூலி வேலை பாா்த்து வந்த பிரியா மன உளைச்சல் காரணமாக செப். 21-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்துஅருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துப் பாா்த்தபோது பிரியா ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது.
இது குறித்த புகாரின்பேரில் கோட்டக்குப்பம் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].