பெனால்டியில் வென்றுகொடுத்த ப்ரூனோ..! யுனைடெட் அணிக்கு முதல் வெற்றி!
பிரீமியர் லீக்கில் இந்த சீசனில் மான்செஸ்டர் யுனைடெட் தனது முதல் வெற்றியைப் பெற்றுள்ளது.
கடந்த போட்டியில் பெனால்டியில் வாய்ப்பை இழந்த ப்ரூனோ பெர்னாண்டஸ் இந்தமுறை கோலாக மாற்றி வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணியும் பர்ன்லி எஃப்சி அணியும் மோதின.
பர்ன்லி அணியின் ஜோஷ் குலேன் 27-ஆவது நிமிஷத்தில் ஓன் கோல் அடிக்க, அதைச் சமன்செய்ய 57-ஆவது நிமிஷத்தில் அந்த அணியின் லைல் போஸ்டர் கோல் அடித்தார்.
யுனைடெட் அணியின் பிரையன் பியூமோ 57-ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, அதற்குப் பதிலடியாக ஜெய்டன் அந்தோனி 66-ஆவது நிமிஷத்தில் சமன்செய்தார்.
ஆட்டம் 2-2 என சமநிலையில் இருக்க, ஸ்டாப்பேஷ் டைமில் 90+7ஆவது நிமிஷத்தில் யுனைடெட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
பெனால்டியில் வென்றுகொடுத்த ப்ரூனோ பெர்னாண்டஸ்
கடந்த போட்டியில் பெனால்டியை தவறவிட்ட ப்ரூனோ பெர்னாண்டஸ் இந்தமுறை சரியாக கோல் ஆக மாற்றினார். கோல் அடித்த மகிழ்ச்சியில் அவர் ஆக்ரோஷமாக கத்தினார். ரசிகர்களும் இதே மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
பிரீமியர் லீக்கில் அதிகமாக கோப்பையை வென்ற தி மைட்டி மான்செஸ்டர் யுனைடெட் அணி சமீப காலமாக மோசமாக விளையாடி வருகிறது.
இந்த சீசனில் முதல் வெற்றியைப் பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 9-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.