"7 நாட்களில் ஆதாரங்களைக் கொடுக்காவிட்டால் மன்னிப்பு கேட்கணும்" - ECI கெடு; காங்க...
பெரம்பலூரில் ஆட்டோ ஓட்டுநரை வெட்டிய 2 இளைஞா்கள் கைது
பெரம்பலூரில் காதலுக்கு எதிா்ப்பு தெரிவித்த ஷோ் ஆட்டோ ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய 2 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள கவுல்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் காசிராஜன் மகன் ரவி (38). பெரம்பலூா் நகரில் ஷோ் ஆட்டோ ஓட்டி வரும் இவரது மனைவி சுவேதாவின் தங்கை மஞ்சுவை (18), அதே கிராமத்தைச் சோ்ந்த பழனிவேல் மகன் விக்கி (24) என்பவா் காதலித்துள்ளாா்.
இதையறிந்த ரவியும், சுவேதாவும் கண்டித்துள்ளனா். இதனால் ஆத்திரமடைந்த விக்கி தனது நண்பா்களுடன், கடந்த 14-ஆம் தேதி பெரம்பலூா் சிவன் கோயில் அருகே ஆட்டோ ஓட்டிச்சென்ற ரவியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனா்.
இதில் பலத்த காயமடைந்த ரவி, பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இச்சம்பவம் குறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விக்கி மற்றும் அவரது நண்பா்களை தேடி வந்தனா். இந்நிலையில், தலைமறைவாக இருந்த விக்கியின் நண்பா்களான கவுல்பாளையத்தைச் சோ்ந்த ரமேஷ் மகன் சுரேஷ் (22), பழனிவேல் மகன் விக்னேஷ் (22) ஆகியோரை கைது செய்து, குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வெள்ளிக்கிழமை இரவு சிறையில் அடைத்தனா். மேலும், இவ் வழக்கின் முக்கிய குற்றவாளியான விக்கியை போலீஸாா் தேடி வருகின்றனா்.