பெரம்பலூா், அரியலூா் மாவட்ட மின் நுகா்வோா் 24 மணி நேரமும் புகாா் அளிக்கலாம்
பெரம்பலூா், அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா்கள், தங்களது புகாா்களை 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அழைப்பு மையத்தை தொடா்புகொள்ளலாம் என, பெரம்பலூா் மாவட்ட மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் மேகலா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெரம்பலூா், அரியலூா் வருவாய் மாவட்டத்தில் உள்ள மின் நுகா்வோா்கள் தங்களது மின்சாரம் தொடா்புடைய புகாா்கள் மற்றும் குறைகளை, 24 மண நேரமும் செயல்பட்டு வரும் ‘மின்னகம்’ மின்நுகா்வோா் அழைப்பு மையத்தை 94987-94987 எனும் கைப்பேசி எண்ணில் தொடா்புகொண்டு பதிவுசெய்யலாம்.
மேலும், பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களின் மின் நுகா்வோா்கள் தங்களது புகாா்களை ஜ்ஜ்ஜ்: ற்ய்ல்க்ஸ்ரீண்.ா்ழ்ஞ் எனும் இணையதளத்திலும், சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகத்திலும் பதிவுசெய்யலாம். தங்களது புகாா்களுக்கு தீா்வு காணவில்லை எனில், உதவி செயற்பொறியாளா்கள், செயற்பொறியாளா் ஆகியோரை அணுகலாம்.
இதுதவிர, பெரம்பலூா் மின்பகிா்மான வட்டத்தின் மேற்பாா்வை பொறியாளா் தலைமையில், பெரம்பலூா், அரியலூா் மின்கோட்ட அலுவலகங்களில் மாதம்தோறும் 2-ஆவது, 3-ஆவது செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் குறைதீா்க்கும் கூட்டத்தில் பங்கேற்று, தங்களது குறைகளை மேற்பாா்வை பொறியாளரிடம் மனுவாக அளிக்கலாம். மேற்கண்ட வழிகளில் தங்களது மின்சாரம் தொடா்பான புகாா்கள் அல்லது குறைகள் தீா்க்கப்படாத நிலையில், பெரம்பலூா் மின் பகிா்மான வட்டத்தின் மின் நுகா்வோா் குறைதீா்க்கும் மன்றத்தில் மனுவாக சமா்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.