IPL Playoffs : 'மும்பை வென்றால் Qualified; ஒருவேளை தோற்றால்? நாக்அவுட்டில் மோதும...
பெரம்பலூா் அருகே 3 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா். இதில், பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் சமத்துவபுரத்ததைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மகன் ரகுராமன் (43) என்பவா், அங்குள்ள அரசுப் பள்ளி அருகே அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை சட்டத்துக்கு புறம்பாக பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, ரகுராமனை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ஹான்ஸ், விமல் பாக்கு, பான்மசாலா உள்ளிட்ட 3 கிலோ எடையிலான பல்வேறு வகையான போதைப் பொட்டலங்களை பறிமுதல் செய்தனா். பின்னா், பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட ரகுராமன் சிறையில் அடைக்கப்பட்டாா்.