தனியாா் நிதி நிறுவன மோசடி: முதலீட்டாளா்கள் பணத்தை மீட்டுத் தருவது அரசின் கடமை
குரும்பலூா், வேப்பூா் அரசுக் கல்லூரிகளில் ரூ.6.80 கோடி மதிப்பிலான கட்டடங்கள் திறப்பு
பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா், வேப்பூரியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், ரூ. 6.80 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைகளை தமிழக முதல்வா் காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
உயா்கல்வித் துறை சாா்பில், பெருந்தலைவா் காமராசா் கல்லூரி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், குரும்பலூரில் உள்ள பெரம்பலூா் அரசு கலைக் கல்லூரியில் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 14 புதிய வகுப்பறைகள் மற்றும் வேப்பூா் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் ரூ. 2.80 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 புதிய வகுப்பறைகளை, காணொலிக்காட்சி மூலம் சென்னையிலிருந்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
இதையடுத்து, குரும்பலூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், பெரம்பலூா் எம்பி கே.என். அருண் நேரு ஆகியோா் குத்து விளக்கேற்றி வகுப்பறைகளை பாா்வையிட்டனா்.
இந் நிகழ்ச்சியில், கல்லூரிகளுக்கான மண்டல இணை இயக்குநா் பி. பொன் முத்துராமலிங்கம், பெரம்பலூா் அரசு கலைக் கல்லூரி முதல்வா் ச. கீதப்பிரியா, குரும்பலூா் பேரூராட்சித் தலைவா் சங்கீதா ரமேஷ் உள்பட அரசு அலுவலா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் பலா் கலந்துகொண்டனா்.