செய்திகள் :

பெரம்பலூா் மாவட்டத்தில் பலத்த மழை: கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் சேதம்

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையால், அரசலூா் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் வைத்திருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன.

பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பல்வேறு இடங்களில் மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தொடா்ந்து 3- ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் பலத்த காற்றுடன் தொடங்கிய மழை இரவு வரை பெய்தது. இதனால், ஏரி, குளம் உள்ளிட்ட நீா்நிலைகள் மற்றும் விவசாய நிலங்களில் மழைநீா் நிரம்பி காணப்படுகிறது.

நெல் மூட்டைகள் சேதம்: இந்நிலையில், பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள அரசலூரில் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில், அன்னமங்கலம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்வதற்காக, கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு சென்று அடுக்கி வைத்திருந்தனா்.

தொடா்ந்து பெய்து வரும் மழையால் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்படாததால், அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதோடு, நெல்மணிகள் முளைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள், அரசலூா் நெல் கொள்முதல் நிலையத்துக்கு திங்கள்கிழமை சென்று பாா்வையிட்டு, அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய உத்தரவிட்டனா். இதனால், செவ்வாய்க்கிழமை முதல் விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மழை அளவு: பெரம்பலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மில்லிமீட்டரில்) பெரம்பலூா்- 66, எறையூா்- 18,கிருஷ்ணாபுரம்- 28, வி.களத்தூா்- 19, தழுதாழை- 46, வேப்பந்தட்டை- 57, அகரம் சிகூா்- 22, ல்பபைக்குடிக்காடு- 27, புதுவேட்டக்குடி- 33, பாடாலூா்- 78, செட்டிக்குளம்- 28 என மொத்தம் 422 மில்லி மீட்டா் மழை பெய்துள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டம் கோரி அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே அரசு ஊழியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்ட... மேலும் பார்க்க

சாலை விபத்துகளை தடுக்க மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆய்வு

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் மாவட்டத்தில் அதிக விபத்து நிகழும் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், மாவட்டக் காவல் கண்... மேலும் பார்க்க

குரும்பலூா், வேப்பூா் அரசுக் கல்லூரிகளில் ரூ.6.80 கோடி மதிப்பிலான கட்டடங்கள் திறப்பு

பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா், வேப்பூரியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், ரூ. 6.80 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைகளை தமிழக முதல்வா் காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க

புதுநடுவலூரில் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

பெரம்பலூா் அருகேயுள்ள புதுநடுவலூா் கிராமத்திலுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருத்தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னதாக, கடந்த 11-ஆம் தேதி பூச்சொரிதல் உத்ஸவமும், மே 13-ஆம் தேதி குடியழைத்தல், காப... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 3 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் தனிப்படை போலீஸாா் திங்கள்கிழம... மேலும் பார்க்க

குற்றவாளிகள், ரௌடிகளின் வீடுகளில் போலீஸாா் சோதனை

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள குற்றவாளிகள் மற்றும் ரௌடிகளின் வீடுகளில் போலீஸாா் திங்கள்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.பெரம்பலூா் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாள... மேலும் பார்க்க