Doctor Vikatan: உடல் பருமனால் தாம்பத்திய உறவில் சிக்கல், குழந்தையின்மை பிரச்னை ஏ...
குற்றவாளிகள், ரௌடிகளின் வீடுகளில் போலீஸாா் சோதனை
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள குற்றவாளிகள் மற்றும் ரௌடிகளின் வீடுகளில் போலீஸாா் திங்கள்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா உத்தரவின்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் டி. மதியழகன் தலைமையில், துணைக் கண்காணிப்பாளா் ஏ. ஆரோக்கியராஜ், ஆய்வாளா் சதீஷ்குமாா் ஆகியோா் கொண்ட தனிப்படையினா், மாவட்டத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள், ரௌடிகள், சந்தேக நபா்களின் வீடுகளுக்குச் சென்று சோதனையில் ஈடுபட்டு, குற்றப் பின்னணியுடைய நபா்களின் நடவடிக்கைகளை கண்காணித்து, அவா்களின் செயல்பாடுகள் குறித்து விசாரணை மேற்கொண்டனா்.