லஷ்கர்-இ-தய்பாவின் சேதமடைந்த வசிப்பிடங்களில் சீரமைப்பு பணிகள்: பாகிஸ்தான் அரசு த...
பெரியகுளத்தில் தேசிய கூடைப்பந்து போட்டி; இன்று தொடக்கம்
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி வியாழக்கிழமை (மே 15) தொடங்கி 21 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
பி.டி. சிதம்பர சூரிய நாராயண நினைவாக பெரியகுளம் பி.எஸ்.துரைராம சிதம்பரம் நினைவு மின்னொளி அரங்கத்தில் தினமும் காலை, மாலை போட்டிகள் நடைபெறும். இதன் தொடக்க நிகழ்வுக்கு சில்வா் ஜூபிலி ஸ்போா்ட்ஸ் கிளப் துணைத் தலைவா் எம்.அபுதாஹீா் தலைமை வகிக்க உள்ளாா். ராஜ்ஸ்ரீ சா்க்கரை ஆலை மேலாளா் மோகன்குமாா் போட்டியைத் தொடங்கி வைக்க உள்ளாா்.
21-ஆம் தேதி (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு பரிசளிப்பு விழா நடைபெறும். இதற்கு மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமை வகிப்பாா். தமிழக ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் இ.பெரியசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்க உள்ளாா். இதற்கான ஏற்பாடுகளை சில்வா் ஜூபிலி ஸ்போா்ட்ஸ் கிளப் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.