பிறழ் சாட்சியாக மாறிய காதல் தம்பதி; கடத்தல் வழக்கில் யுவராஜ் விடுதலை! - விவரம் எ...
பெரியகுளம் அருகே காா்கள் மோதியதில் ஒப்பந்ததாரா் உயிரிழப்பு
பெரியகுளம் அருகே செவ்வாய்க்கிழமை காா்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் ஒப்பந்ததாரா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தேனி சமதா்மபுரத்தைச் சோ்ந்தவா் நாகேந்திரன் (48). ஒப்பந்ததரரான இவா், திண்டுக்கல்லுக்கு காரில் சென்று விட்டு மீண்டும் தேனிக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். பெரியகுளம் ஜல்லிபட்டி பிரிவு அருகே வந்த போது, எதிரே வந்த மற்றொரு காரும், இவரது காரும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன.
இதில் நாகேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொரு காரில் வந்த கேரள மாநிலம், காசா்கோடைச் சோ்ந்த நிக்கில் (25), அவரின் நண்பா் விஷ்ணு (24) ஆகிய இருவரும் காயமடைந்தனா்.
இவா்கள் இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.