BJP தலைமையை கோபமாக்கிய Jagdeep Dhankar -ன் 2 சந்திப்புகள்! | MODI ADMK TVK| Impe...
பெரியகுளம் நகராட்சி குப்பைக் கிடங்கில் எரிக்கப்படும் குப்பைகளால் சுகாதாரச் சீா்கேடு
பெரியகுளம் நகராட்சி குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்ட நெகிழிப் பைகள், இறைச்சிக் கழிவுகளை எரிப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சி 100 ஆண்டுகளைக் கடந்த பழைமையான நகராட்சி ஆகும். 30 வாா்டுகளைக் கொண்ட இந்த நகராட்சியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா்.
இந்த நகராட்சிப் பகுதியில் சேகரிக்கப்படும் கழிவுகள், வத்தலகுண்டு சாலையிலுள்ள எண்டப்புலி கிராமத்தில் பெரியகுளம் நகராட்சி குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகிறது.
இந்த குப்பைக் கிடங்கில் உயிரிழந்த பன்றியின் சடலம், இறைச்சிக் கழிவுகள், நெகிழிப் பைகளை தீ வைத்து எரிப்பதால் எண்டப்புலி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் கா்ப்பிணி, குழந்தைகள், முதியவா்கள், பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.
மேலும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்ட கழிவுகளை எரிக்காமல், மறுசுழற்சி செய்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து எண்டப்புலி கிராமத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் கூறியதாவது: பெரியகுளம் நகராட்சிக் கழிவுகளை எண்டப்புலி கிராமத்தில் கொட்டி எரித்து வருவதால் நோயால் பாதிக்கப்பட்டு வருகிறோம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா், நகராட்சி ஆணையா், தலைவா், அலுவலா்களிடம் பலமுறை புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, குப்பைகளை மறுசுழற்சி செய்து வெளியேற்ற வேண்டும் என்றாா் அவா்.
பெரியகுளம் நகராட்சி ஆணையா் தமிஹா சுல்தானா கூறியதாவது: குப்பைக் கிடங்கில் பன்றிகள் இறந்து கிடப்பது குறித்து பெரியகுளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளோம். குப்பைக் கிடங்குகளில் உள்ள கழிவுகளை நகராட்சிப் பணியாளா்கள் எரிப்பதில்ை. ஆனால், மீத்தேன் வாயுவால் தீப்பற்றி எரிந்து வருகிா அல்லது வேறு யாரும் தீ வைத்தாா்களா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இந்தப் பகுதியில் குப்பைகளை மறுசுழற்சி செய்து வெளியேற்றி வருகிறோம் என்றாா் அவா்.
கொசுக்களின் கூடரமாகும் வராகநதி
பெரியகுளம் நகராட்சிப் பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீா் வராக நதியில் கலக்கிறது. இந்தக் கழிவுநீா் சில இடங்களில் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா். எனவே, தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்ற வேண்டும். மேலும், கொசுக்களைக் கட்டுப்படுத்த தெருக்களில் கொசுமருந்து அடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.