சூப்பர் அறிவிப்பு... 7,783 அங்கன்வாடி பணியாளா், உதவியாளா் பணி: தமிழக அரசு அறிவிப...
பெரிய குரும்பப்பட்டி காயாம்பு அய்யனார் கோவில் ஜல்லிக்கட்டு!
விராலிமலை அடுத்துள்ள பெரிய குரும்பப்பட்டி காயாம்பு அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 50 காளைகள் அவிழ்க்கப்பட்ட நிலையில் 5 வீரர்கள் காயமடைந்தனர்.
வருடந்தோறும் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி நிகழாண்டு காலை 9 மணிக்கு தொடங்கியது.

ஆர்டிஓ அக்பர் அலி, விராலிமலை தொகுதி எம்எல்ஏ முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், திமுக பொதுக்குழு உறுப்பினர் தென்னலூர் பழனியப்பன் போட்டியை தொடங்கி வைத்தனர்.
முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, கரூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் கால்நடை மருத்துவர்கள் பரிசோதனைக்கு பிறகு வாடிவாசலில் இருந்து ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது.
வாடிவாசலில் இருந்து சீற்றத்துடன் சீறி பாய்ந்து வெளியேறும் காளைகள் சீண்டிப்பார் என கட்டிளம் காளையர்களை மிரட்டி வருகின்றன.
சில காளைகள் பிடிபட்டாலும் பல காளைகள் இளம் காளையர்களை மிரட்டி சென்றன.
போட்டியை பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் ஆரவாரத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
போட்டியில் காயமடைந்தவர்களுக்கு பொது மருத்துவர்கள் தலைமையில் மருத்துவ குழுவினர் வாடிவாசல் அருகே முகாம் அமைத்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதில் 5 பேர் காயமடைந்த நிலையில் அவர்களுக்கு முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
போட்டியில் பங்கேற்ற வீரர்கள், சிறந்த காளைகளுக்கு பீரோ, கட்டில், வெள்ளி நாணயங்கள், தங்க என பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
பாதுகாப்புப் பணியில் 7 ஆய்வாளர்கள் தலைமையில் 150 காவலர்கள், ஊர்காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.