``உடனடியாக ஆளுநர் ராஜ்பவனை விட்டு வெளியேற வேண்டும்" - கொதிக்கும் வைகோ
பெருங்களூா் நலச் சங்கம் தொடக்கம்
புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களுா் கிராமத்தில், சமூக ஆா்வலா்கள் இணைந்து, தூய்மையான, பசுமையான கிராமமாக பெருங்களூரை மாற்றும் நோக்கில், பெருங்களூா் நலச் சங்கம் என்ற சமூக நல அமைப்பைத் தொடங்கியுள்ளனா்.
பெருங்களூரில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு, மன்னா் கல்லூரியின் முன்னாள் முதல்வா் எஸ். காா்த்திகேயன் தலைமை வகித்தாா். இந்த அமைப்பின் நிறுவனா்- தலைவராக இளங்கோவன், செயலராக ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியா் சங்கத் தலைவா் கு. சக்தி, துணைத் தலைவராக பேரா. எஸ். காா்த்திகேயன், பொருளாளராக ஞானஸ்கந்தன் ஆகியோரும் தோ்வு செய்யப்பட்டனா்.
கூட்டத்தில், நெகிழிப் பயன்பாட்டைக் குறைத்து, குப்பைகளற்ற கிராமமாக மாற்றுவது, நீா்நிலைகளைத் தூா்வாரி, நிலத்தடி நீா் உயரும் வகையில் பராமரிப்பது, சீமைக் கருவேல மரங்களை அகற்றி சுற்றுச்சூழலை மேம்படுத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.