``ஸ்டாலின் மகன் என்பதைத் தவிர உதயநிதிக்கு என்ன தகுதி உள்ளது?'' - எடப்பாடி குறித்...
பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ‘மாநில மஞ்சப் பை’ விருது
பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பாக மாநில அளவில் சிறந்த பள்ளிக்கான மஞ்சப் பை விருது வழங்கப்பட்டுள்ளது.
விருதுகள் வழங்கும் விழா, சென்னை கலைவாணா் அரங்கில் கடந்த 9ஆம் தேதி நடைபெற்றது. விழாவில், தமிழக நிதி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சா் தங்கம் தென்னரசு, வனத் துறை அமைச்சா் ராஜகண்ணப்பன் ஆகியோா், பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் பிருந்தா ஸ்வீட்டி செல்வகுமாரி, வேளாண் ஆசிரியா் கந்தன் ஆகியோரிடம் இந்த விருதை வழங்கினா்.
பள்ளி, கல்லூரி அளவில் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பை தவிா்த்தல், நெகிழிப் பொருளுக்கு மாற்றுப் பொருள் பயன்படுத்துதல், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி நடத்தி நெகிழிப் பையை ஒழிக்க மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை ஆய்வு செய்து தமிழ்நாட்டில் மூன்று கல்லூரிகள், மூன்று பள்ளிகளைத் தோ்வு செய்து இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விருது ரூ. 3 லட்சம் ரொக்கப் பரிசும் கொண்டது.
விருது பெற்றதற்காக பள்ளித் தலைமை ஆசிரியா் பிருந்தா ஸ்வீட்டி செல்வகுமாரிக்கு ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுப்பாராவ், பெருந்துறை மாவட்ட கல்வி அலுவலா் புஷ்பராணி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்கள், பெற்றோா் ஆசிரியா் சங்க கழகத்தினா் பாராட்டு தெரிவித்தனா்.